Header Ads



மஹிந்த ராஜபக்ச தலைமையில், புதிய கூட்டணி - மாவட்ட அமைப்பாளர்களும் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இதில் பெரும்பான்மையாகவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ச நாற்காலி சின்னத்தில் அல்லது வேறு ஏதேனும் சின்னத்தில் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் அக்கூட்டணியின் களுத்துறை மாவட்ட தலைவராக குமார வெல்கம பெயரிடப்பட்டுள்ளார்.

கம்பஹா மாவட்ட தலைவராக பிரசன்ன ரணதுங்கவும், கொழும்பு மாவட்டத்தில் விமல் வீரவன்வின் தலைமையில் மேலும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படவுள்ளனர்.

அநுராதபுர மாவட்டத்திற்கு எஸ்.எம். சந்திரசேன, பொலன்னறுவை மாவட்டம் ரொஷான் ரணசிங்க, குருநாகல் மாவட்டம் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, ஹம்பாந்தோட்டை மாவட்டம் நாமல் ராஜபக்ச, நுவரெலியா மாவட்டம், சீ.பீ ரத்நாயக்க, கண்டி மாவட்டம் திஸ்ஸ அத்தநாயக்க அல்லது கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் தலைமை தாங்கவுள்னர்.

இந்த புதிய கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 comments:

  1. alliance of robbers, nice.................

    ReplyDelete
  2. மீன்டும் கல்வர் கூட்டத்தை தயார் படுத்துகிறாார் (அலிபாபாவும்+40தீருரடர்களும்)

    ReplyDelete

Powered by Blogger.