Header Ads



அக்கரைப்பற்றிருந்து ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நிதியுதவி - மனது நெகிழ்கிறது என்கிறார் பிரதிநிதி

அக்கரைப்பற்று Royal Youths சமூக சேவை அமைப்பினால்  மியன்மார்-ரோஹிங்க்யோ முஸ்லிகளுக்கு உதவும் பொருட்டு அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டும் பணி மூலம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொகை (ரூபா 1,165,500.00) உத்தியோகபூர்வமாக Arakan Rohingya Union (ARU) இடம் வெள்ளிக்கிழமை (2015.06.05) இரவு கட்டாரில் வைத்து கையளிக்கப்பட்டது. 

கடந்த திங்கட் கிழமை (2015.05.25) ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒரு வாரகாலம் அக்கரைப்பற்று பிரதேசத்திலும் கத்தார் வாழ் அக்கரைப்பற்று இளைஞர்களிடத்திலும் சேகரிக்கப்பட்ட மேற்படி தொகையே ARU இன் இயக்குனர் பேராசிரியர் வகார் உத் தீன் அவர்களிடம் நேரடியாக கையளிக்கப்பட்டது. இக்குறித்த நிதி சேகரிப்பில் துபாய் வாழ் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அல்ஹம்துலில்லாஹ், இலங்கையில் ரோஹிங்க்ய முஸ்லீம்களுக்காக சேகரிக்கப்பட்ட முதல் நிதி சேகரிப்பு இதுவாகும் என்பது விசேட அம்சமாகும். இதில் பேட்டியளித்த ARU இயக்குனர், ரோஹிங்க்ய முஸ்லீம்களை சர்வதேச ரீதியில் பிரதிநிதிப்படுத்துகின்ற ஒரே ஒரு அமைப்பு இதுவாகும் என்பதால் மேற்குறித்த தொகை உரியவர்களிடத்தில் மிக சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளவேண்டியதில்லை என்று உறுதியளித்ததுடன் இத்தொகை மிகப்பெரியளவிலான தொகை இல்லாவிடினும் அதே வகையான பிரச்சினையை எதிர்கொண்ட இலங்கை முஸ்லீம்களிடம் இருந்து பெறுவது மனதை நெகிழ்ந்துவிடச்  செய்கின்றது எனக்கூறினார். மேலும் இலங்கை வாழ் முஸ்லீம்கள் என்றும் தங்களுடைய ஆதரவை ரோஹிங்க்ய முஸ்லீம்களுக்கு வழங்க வேண்டும் என்றும் அதற்காக எங்களுடைய இளைஞ்சர் கழகம் முன்னின்று செயற்படவேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார். 

எல்லாம் வல்ல இறைவன் இதில் பங்கு கொண்ட அனைவரையும்  பொருந்திக்கொள்வதோடு நிறைவான கூலிகளையும் வழங்கி வைப்பானாக. ஆமீன்.



2 comments:

  1. அல்ஹம்துலில்லாஹ். முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாம் வல்ல அந்த அல்லாஹுவை மனதில் இருத்தி செய்த இந்த உதவியை நிட்சயமாக அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக..! இதற்காக உதவிய சகோதரர்களின் ஆயுளையும் பொருளாதாரத்தையும் அதிகரிக்க செய்வானாக. இப்படியான இளைஞர்களை ஏனைய இளைஞர்களும் முன்மாதிரியாக கொள்வது சாலவும் சிறந்தது. அவர்களது கடப்பாடும் ஆகும்.

    ReplyDelete
  2. Assalamualaikum
    Dear Brothers
    Please make arrangements to organise and collect from other muslims nationally.
    Everyone is eaager to donate.
    In the meantime please let us know what happened to those brothers from Myanmar they were brought to Oluvil and Galle?
    l think 2yearsback.
    Is it true a monk who is close associate of 969 man went for translation.
    No news after that
    Are tyey still in Srilanka?

    ReplyDelete

Powered by Blogger.