Header Ads



மஹிந்த ராஜபக்சவின் பௌத்த அரசியலுக்கு, மைத்திரியின் கோட்டையிலிருந்து எதிர்ப்பு..!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்நாட்களில் விகாரைகளை இலக்கு வைத்து அரசியல் அதிகார திட்டத்தை முனனெடுத்து செல்கின்ற நிலையில் தற்போது வரையில் பல விகாரைகளில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

விசேடமாக நாளை முதல் பொலன்னறுவை மாவட்ட விகாரைகளில் அரசியல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதற்கான அலங்காரங்களை செய்வதற்கான பணிகள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் பொலன்னறுவை ஸ்ரீ இசிப்பத்தனாராமய விகாரையில் பங்களிப்பாளர்கள் நால்வரை தவிர ஏனைய அனைத்து பங்களிப்பாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதோடு நேற்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வெலிகந்த பிரதேசத்தில் பல விகாரைகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வாறான கூட்டங்களுக்கு அப்பிரதேச விகாரைகளில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளன.

மைத்திரிகம மற்றும் எகொடபத்து பிரதேச விகாரைகளில் பங்களிப்பாளர்களினால் பாரிய எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இசிப்பத்தனாராமய விகாரையில் கூட்டத்திற்காக வேறு பிரதேசங்களில் இருந்து மக்களை அழைத்து வருவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் பங்களிப்பாளர்களின் எதிர்ப்பை கண்டுக்கொள்ளாமல் கூட்டத்தை முன்னெடுத்துச் சென்றால் பிரதேச மக்கள் அன்றைய தினம் எதிர்ப்பு பாதயாத்திரை ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

Powered by Blogger.