Header Ads



இன்று மாலை அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

அமைச்சரவை இன்று மாலை 6.00 மணிக்கு அவசரமாக ஒன்றுகூடவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அறிவிப்பை விடுத்துள்ளார்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினருக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் குறித்து ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.

இக்கூட்டத்தில், 20ம் திருத்தச் சட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

கூட்டத்தின் பின்னர் உத்தேச திருத்தச் சட்டம் தொடர்பில் உச்ச நீதிமன்றின் சட்டம் விளக்கம் கோரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை விருப்பு வாக்குமுறைமையை நீக்குவோம் 20 ஐ வெற்றியடைய செய்வோம் எனும் தொனி பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட கூட்டம் இன்று 3.30 மணியளவில் ஜனாதிபதி தலைமையில் கொழும்பு விகார மகாதேவி பூங்காவனத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.