Header Ads



மகிந்தவை தேசிய பட்டியல் எம்.பி.யாக நியமிக்க, மைத்திரி வாக்குறுதி..?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை அடுத்த நாடாளுமன்றத்தில் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எழுத்து மூலம் வாக்குறுதியை வழங்கியிருப்பதாக அரசாங்கத்தின் உட்தரப்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவே ராஜபக்ச தரப்பினருக்கு ஜனாதிபதி சிறிசேன வழங்க இணங்கிய அதிகூடிய சலுகை என கூறப்படுகிறது. எனினும் மகிந்த ராஜபக்ச இதற்கு இணக்கம் வெளியிட்டாரா இல்லையா என்பது பற்றி இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

அதேவேளை மகிந்த ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதென்றால், இரத்தினபுரி அல்லது குருணாகல் ஆகிய மாவடடங்களில் ஒன்றில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மகிந்த இரத்தினபுரியில் போட்டியிடுவதை முன்னாள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன விரும்பவில்லை எனவும் பேசப்படுகிறது.

குருணாகலில் அவர் போட்டியிடும் பட்சத்தில் அந்த மாவட்டத்தில் போட்டியிடும் தயாசிறி ஜயசேகரவுக்கு தடைகள் ஏற்படும் என்பதால், அந்த மாவட்டத்திலும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை மகிந்த ராஜபக்ச, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்துள்ளார். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனைக்கு இணங்கவில்லை என பேசப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே மகிந்த ராஜபக்சவை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி எழுத்துமூல வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

1 comment:

  1. Mahindaval summave irukka mudiyavillai enral Museum irukkave irukkirazu !

    ReplyDelete

Powered by Blogger.