Header Ads



மன்னாரில் சட்டவிரேதத்தை அகற்ற நடவடிக்கை, பிக்குகளுக்கு உறுதியளித்த மைத்திரி (வீடியோ)


மன்னாரில் வில்பத்து காடு அழிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் குடியேற்றப்பட்டவர்களை, மாற்று இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இது குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளதாக, பௌத்த பிக்குகள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

அமைச்சர் றிசாட் பதியுதீனினால் சட்டவிரோதமான முறையில் இந்த குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தது. 

இது தொடர்பான ஆதாரங்கள் அடங்கியஅறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பௌத்த பிக்குகள் சம்மேளனத்தினால் கையளிக்கப்பட்டிருந்தது. 

இதன் போது இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, குறித்த சட்டவிரோத குடியேறிகளை மாற்று இடங்களில் குடியேற்றுவது குறித்து அவதானம் செலுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக, அந்தசம்மேளனத்தின் செயலாளர் மாத்தர ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். 



No comments

Powered by Blogger.