Header Ads



"அம்பாரை மக்கள் முட்டாள்கள் அல்ல" பசீர் சேகுதாவூத்திற்கு ஒரு பதில்

-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

பொதுத்தேர்த்ல் மிக விரைவில் நடை பெறலாம் என எதிர்பார்க்கப்படும் இச்சூழ்நிலையில்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிஸாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூத், மீண்டும்அம்பாறை  மாவட்டக் கரையோர கச்சேரி கோரிக்கையை கையில் எடுத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் அளவுக்கு அம்பாரை மாவட்ட மக்கள் முட்டாள்கள் அல்ல என கல்முனை அபிவிருத்தி  போரம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்முனை அபிவிருத்தி  போரமின் தலைவர் அஷ்ஷெய்கு ஏ.பி.எம்.அஸ்ஹர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்ட்டள்ளதாவது.

நடை பெறப்போகும் பொதுத்தேர்தலுக்கு முன்னர் அம்பாரை கரையோர மாவட்டத்தை பிரகடனப்படுத்துமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவுக்கு கடிதம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் அனுப்பிவைத்துள்ளதாக  ஊடகங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

உண்மையில் கரையோர மாவட்ட கோரிக்கை  என்பது இம்மாவட்ட மக்களின் நியாயமான நீண்ட கால கோரிக்கையாகும் இது கிடைத்தால் எல்லோரும் சந்தோஷமடையலாம். ஆனால் இக்கோரிக்கையை முன்வைத்து இம்மாவட்ட மக்களை மடையர்களாக நினைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல தேர்தல்களை நடத்தி முடித்துவிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்தலைவர் அஷ்ஷஹீ்த் எம்.எச.எம்.அஷ்ரப் அவர்களின் மறைவின் பின்னர் நடை பெற்ற ஒவ்வொரு தேர்தலின் போதும் இக்கோரிக்கை பற்றி பேசப்படும். தேர்தல் ஒன்று  வரும் போது இக்கோரிக்கை வெளியில் வரும் தேர்தல்முடிந்தவுடன் இக்கோரிக்கை மறக்கடிக்கப்பட்டுவிடும்.  இதுதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  வழமை இதனால்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கரையோர மாவட்டம் பெற்றுத்தரப்படும் என்ற நம்பிக்கயை இம்மாவட்ட  மக்கள் எப்போதே இழந்து விட்டார்கள்.

இந்த விடத்தில்  இந்த கோரிக்கையினை எப்போதும் வலியுறுத்தி வரும்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி  பாராட்டப்படவேண்டியவர்.

ஆனால் தற்பொது மீண்டும் பாராளுமன்றத்தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில்கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இக்கோரிக்கை பற்றி பேசப்பட்ட போது அம்பாரை கரையோரக் கச்சேரியின் தேவையை குறைத்து மதிப்பிட்டு கருத்துக்கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிஸாளரும் ,பாராளுமன்ற உறுப்பினருமான பசீர் சேகுதாவூதுக்கு இப்பொது என்ன ஞானம் பிறந்துளள்தோ  என எண்ணத்தோன்றுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கரையோர மாவட்டம் ஒரு போதும் பெற்றுத்தரப்படமாட்டாது என்ற முடிவுக்கு இம்மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை மக்கள் வந்துள்ளனர்.எனவே இக்கோரிக்கையை மீண்டும் கிளப்பி மக்களை உசாராக்கி மடயர்களாக்கி இதன் மூலம் கட்சிக்குள்ளும் வெளியிலும்  தான் இழந்துள்ள நம்பிக்கையை கட்டியெழுப்பலாம் என்ற கனவோடு உங்களது செயற்பாடுகளை வைத்துக் கொள்ளவெண்டாம் எனவும் உங்களது செய்பாடுகளை நம்புவதற்கு அம்பாரை மாவட்ட மக்கள் தயாறில்லை எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. It is not an easy task to create a separate district because it needs 2/3 majority in parliament. Greatest obstacles are anti muslim feelings among majority people and a political issue among major parties and minor parties. So this has to be handled very carefully.

    ReplyDelete
  2. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸ் மற்றும் அதன் உறுப்பினர்கள் நினைத்து கொண்டு இருப்பது கிழக்கு மாகாணத்தில் மட்டும் தான் முஸ்லிங்கள் வாழகிறார்கள் என்று அவர்களின் முடிவுகளும் கோரிக்கைளும் சுயநலத்தன்மையை காட்டுவது வருத்தப்படக்கூடிய விடயம். இதுவும் இனவாதிகளுக்கு ஒரு பேசும் பொருளாக மாறக்கூடும்.
    அவர்கள் தமது கருத்துகளுக்கு முன் நாட்டில் உள்ள ஏனைய பகுதிகளிலும் முஸ்லிங்கள் வாழ்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் முஸ்லிங்களுக்கு ஒரு ஊடகம் இல்லாத காரணத்தால் தமது கருத்துகள் திரிபடையக்கூடிய நிலைமையை கூட அவர்கள் கருத்தில் கொள்ளாமல் இருப்பது கவலையை தருகிறது

    ReplyDelete

Powered by Blogger.