Header Ads



மாகாண அமைச்சருக்கு எதிராக பொலிஸார் சீற்றம், 7ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கமுடியும்

பொலிஸார் மீது கல் எறிவதாக எச்சரிக்கை விடுத்த தென் மாகாண அமைச்சருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாம் இந்தக் கூற்றை மிகவும் வெறுப்புடன் கண்டிக்கின்றோம். மாகாண அமைச்சரின் பயங்கரமான கூற்றுக்கு குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும்.

அரச ஊழியர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையிலும் தண்டனை விதிக்கப்பட முடியும். இந்தக் கூற்று தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

விசாரணை நடத்த உச்ச அடிப்படையிலான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர், நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளை மக்களைக் கொண்டு கல் எறிந்து கொலை செய்வதாக தென் மாகாண அமைச்சர் டி.வீ. உபுல் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் கருத்து வெளியிட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அந்த இடத்தில் இருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

மாகாண அமைச்சரின் கருத்து தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

No comments

Powered by Blogger.