Header Ads



சிங்கள பெளத்த வாக்குகளால், இம்முறை 125 ஆசனங்களை கைப்பற்றுவோம் - UNP

பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளபோதும் தேசிய அரசாங்கம் அமைப்பதே கட்சியின் நோக்கமென ஐ.தே.க. உறுப்பினரான கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகளால் மாத்திரமே ஐ.தே.க. அரசியலில் நிலைத்திருப்பதாக கூறப்படும் கருத்துக்கு தகுந்த பாடம் புகட்டும் வகையில் எமது கட்சி இம்முறை சிங்கள பெளத்த வாக்குகளால் பாராளுமன்றத்தில் ஆகக்கூடியது 125 ஆசனங்களை கைப்பற்றுமென்றும் அவர் சூளுரைத்தார்.

ஸ்ரீ கொத்தவில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கவை தோற்கடிக்கும் முயற்சியில் தேசத்துரோகிகளான வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவரவுள்ளனர்.

நாம் இதற்கு அஞ்சவில்லை எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்க தயாராகவுள்ளோமென தெரிவித்த அமைச்சர் அகில விராஜ், இவ்வாறான சில்லறை வேலைகளிலிருந்து விலகி மக்களின் தேவைகளை நிறை வேற்றும் பாரிய வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்தியிருப்பதாகவும் கூறினார். மேலும் அவர் தெரிவித்ததாவது:

ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றிருப்பாராயின், இந்நேரத்திற்கு பாராளுமன்றம் கலைக்கப்பட் டிருப்பதுடன் எமது ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் வேட்புமனு ரத்துச் செய்யப்பட்டிருக்கும்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றம் கலைக்கப்படுவது இழுத்தடிக்கப்படுகிறது. எதிர்வரும் 05 ஆண்டிற்குள் எமது இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை பெற்றுத்தரும் நோக்கில் சர்வதேசத்தின் உதவியுடன் பாரிய உற்பத்தி நிறுவனங்களை இலங்கையில் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்களை பிரதமர் முன்னெடுத்துள்ளார்.

இவற்றை சீர்குலைக்கும் முயற்சியே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்படு கின்றனர். ஆனால் அன்று மஹிந்த ராஜபக்ஷவுக்கு ‘இயஸ்சேர்’ கூறியவர்கள் இன்று ‘நோசேர்’ சொல்லுமளவுக்கு துணிந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான முதுகெலும்பை பெற்றுக்கொடுத்ததே எமது கட்சியினர் தான்.

எதிர்க்கட்சி தலைவர் இப்போது என்ன பேசுகின்றார் என்பதனை புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. நாம் எச்சந்தர்ப்பத்திலும் யாரையும் ஐ.தே.கவை பிளவுபடுத்த அனுமதித்ததில்லை. அதேபோன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் பிளவுபடுத்த வேண்டா மென்று அதன் கட்சி உறுப்பினர்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.

No comments

Powered by Blogger.