Header Ads



விரைவில் UPFA இன் மேடையில் ஏறுவேன், திகதியை மக்கள் நிர்ணயிப்பார்கள் மஹிந்த

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேடையில் விரைவில் ஏறப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மேடையில் ஏறும் திகதியை மக்கள் நிர்ணயிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

குருணாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அனுப்பி வைத்த செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த போது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அழுத்தங்களை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தின் ஊடாக தாம் எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சூழ்ச்சிகாரர்களினால் தமது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கக் கூடுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு ஆதரவாக வாக்களித்த 58 லட்ச மக்களின் உரிமைகளை இந்த அரசாங்கம் உறுதி செய்யாது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

விரைவில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மேடையில் ஏறப் போவதாகவும் மக்கள் திகதியை நிர்ணயிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் செய்தியை முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும மேடையில் வாசித்தார்.

6 comments:

  1. அடுத்த மாதம் 31ஆம் திகதி வரை காத்திருங்கள்.

    ReplyDelete
  2. Ex president Sir, people will never support you anymore, please
    enjoy your holidays!

    ReplyDelete
  3. Insa Allah, allah will defeat u.... Wait & see

    ReplyDelete
  4. ஆடதடா.. ஆடதடா.. மனிதா -நீ
    ஆடி அடங்கும் நேரம் உண்டு புரிடா!

    ReplyDelete
  5. விரைவில் தூக்கு மேடை ஏறுவது உறுதி திகதியை அமெரிக்கா தீர்மானிக்கும்

    ReplyDelete
  6. அதிகாரம் இருக்கும்போது கோடிக்கணக்கில் செலவளித்து கட்அவுட் அடித்து, மேடை மேடையாக ஏறியும் தோற்றுப் பொனீரே. மேடை ஏறுவது பெரிய காரியமல்ல. தோல்வி நிச்சயம். உன் பாவச் சுமைகளுக்கு மேடை இடிந்து விழுந்துவிடுமோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.