Header Ads



கேஹலிய ரம்புக்வெலயின் பித்தலாட்டத்தை, அம்பலப்படுத்தும் கபீர் ஹாசீம்

முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல, ஐக்கிய தேசிய கட்சியுடன் மீண்டும் இணையும் நோக்கில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் மூன்று தடவைகள் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் கபீர் ஹாசீம் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய ஒரு போதும் தயாரில்லை என முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் வெளியிட்ட அறிக்கையிலே கபீர் ஹாசீம்  இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 8 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி தோல்வியடைந்தவுடன் முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்ல எதிர்கட்சி அலுவலகத்திற்கு வந்து கட்சியின் தலைவருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மேலும் இரண்டு தடவைகள் அலரி மாளிகைக்கு வந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்து கொள்ளுமாறு கோரியதாக அதன் பொது செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல்லவிடம் sfm செய்தி பிரிவு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவை சந்தித்தமையானது ரகசியம் அல்லவென குறிப்பிட்டார்.

முன்னதாக ரணில் விக்கிரமசிங்க தம்மை ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்ததாக கெஹலிய ரம்புக்வெல கூறியிருந்தமை கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.