Header Ads



அரசியலமைப்புப் பேரவைக்கு சலாம் நியமனம் - அங்கீகரிக்க பாராளுமன்றம் கூடுகிறது

அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ள மூவர் சிவில் சமூக பிரதிநிதிகளையும் நியமிக்க பாராளுமன்ற அங்கீகாரம் பெறப்பட வேண்டியுள்ளதால் ஜூன் 3ஆம் திகதி பாராளுமன்றம் கூடி இதற்கு அனுமதி வழங்க இருப்பதாகத் தெரிய வருகிறது.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தி னூடாக நியமிக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்கு பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களான சம்பிக ரனவக்க, விஜேதாஸ ராஜபக்ஷ மற்றும் ஜோன் செனவிரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சிவில் சமூகம் சார்பில் ராதிகா குமாரசாமி, ஏ. டபிள்யு. சலாம் மற்றும் ஏ. ரி. ஆரியரத்ன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

சிவில் பிரதிநிதிகளின் பெயர்களுக்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளதால் விசேட பாராளுமன்ற அமர்வொன்று இடம்பெற இருப்பதாக பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன ஆனால் விசேட பாராளுமன்ற அமர்வொன்றை நடத்துவ தானால் பிரதமர் அது குறித்து சபாநாய கருக்கு அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதி பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தாவெல இது வரை அவ்வாறான அறிவிப்பு கிடைக்கவில்லை என்றார்.

அடுத்த வாரமே பாராளுமன்றம் கூட இருப்பதால் அதன் போதும் சிவில் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி பெற முடியும் எனவும் அவர் குறிப் பிட்டார்.

1 comment:

  1. We don't need a man to say " yes yes all fine". We need a man with back bone who sincerely work for SL Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.