Header Ads



சவூதி அரேபியாவுக்கு, ஈரான் எச்சரிக்கை

யேமனில் உள்ள ஈரான் தூதரகத்துக்கு அருகே சவூதி தலைமையிலான கூட்டுப் படைகள் தாக்குதல் நிகழ்த்தியதை, தங்கள் நாட்டுக்கான சவூதி அரேபியத் தூதரை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் நேரில் அழைத்துக் கண்டித்தது.

 தாக்குதல்களிலிருந்து தூதரகங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் சர்வதேச விதிமுறைகளை சவூதி அரேபியா மீறினால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தூதரிடம் ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

 ஈரானைச் சேர்ந்த ஐ.எஸ்.என்.ஏ. செய்தி நிறுவனம் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.  யேமனில், தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு கைப்பற்றினர்.

அவர்களுக்கு ஈரான் ஆயுத உதவி அளித்து வருவதாக சவூதி அரேபியா குற்றம் சாட்டி வருகிறது. எனினும், யேமனில் நிவாரண உதவிகளை மட்டுமே அளித்து வருவதாக ஈரானும், ஹூதி கிளர்ச்சியாளர்களும் கூறி வருகின்றனர்.

 இந்த நிலையில், யேமனில் அதிபர் மன்சூர் ஹாதியின் தலைமையில் மீண்டும் ஆட்சியை ஏற்படுத்தும் நோக்கில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படை, ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது கடந்த மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது.

No comments

Powered by Blogger.