Header Ads



மைத்திரியிடமும், ரணிலிடமும் முஸ்லிம்கள் தொடர்பில் 2 கேள்விகள்..!

இந் நாட்டு தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடமும்  பிரதமர் ரணிலிடமும்   மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் இரண்டு பகிரங்க கேள்விகள் 

(1)    கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பகிரங்க அறிக்கை விட்டிருந்தீர்கள்.

    அப்படியாயின் அதே அரசாங்கத்தின் (விஷேட ஜனாதிபதி செயலணி PTF)  சிபாரிசின் அடிப்படையில் மீள்குடியேற்றப் பட்ட தமிழ் சமூகத்தின் மீள்குடியேற்றம் சரியானதா. பிழையென்றால் மாற்றுத் தீர்வு என்ன. வில்பத்து காட்டின் மத்தியில் குடியேற்றியுள்ள சிங்கள பௌத்த மக்களின் “பூக்குளம்” கிராமத்தை எங்கு நகர்த்த போகின்றீர்கள்.

     நீங்கள் குறிப்பிட்டது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றியது மாத்திரம் என்றால்

ஞானசாரர்கள் கூறும் பௌத்த நியதிகளின்படி முஸ்லிம்களுக்கு ஒரு கரண்டியாலும் ஏனையவர்களுக்கு இன்னொரு கரண்டியாலும் பகிரப் போகின்றீர்களா ?

(2)     கடந்த சில நாட்களாக மன்னார் மரிச்சுகட்டி , முசலி போன்ற முஸ்லிம் கிராமங்களுக்கு பௌத்த தீவிரவாதிகள், பிக்குகள்  படையாக திரண்டு வந்து அங்கே முஸ்லிம் கிராமங்களுக்கு மத்தியில் அரச மரங்களை நட்டி தமது மேலாதிக்கத்தை நிலை நாட்டிவிட்டு வந்தார்கள். இதே விடயத்தை இவர்கள் யாழ்பாணத்தில் தமிழ் கிராமங்கள் மத்தியில் சென்று செய்திருந்தாலும், இப்போதிருப்பது போன்று நீங்களும்  ரணிலும் அலவாங்கை விழுங்கியவர்கள் போல் அமைதியாக இருந்திருப்பீர்களா ?

  இந் நாட்டில் பௌத்த தீவிரவாதத்தை விரட்டியடித்து நீங்களும் ரணிலும் கூட்டாக நல்லாட்சியமைக்க திரளாக வாக்களித்த முஸ்லிம் சமூகத்தின் ஒரு வாக்களானாக நெஞ்சுறுதியுடன் உங்களிடம் இக்கேள்விகளை முன்வைக்கின்றேன் . பதில் தாருங்கள்

ஏ .எம் எம் முஸம்மில்,
தலைவர் , மலையக முஸ்லிம் கவுன்சில்( UCMC ) –பதுளை.   

2 comments:

  1. Good question answer MY 3

    ReplyDelete
  2. Please include the Tsunami Houses built by Saudi Fund into this question.

    ReplyDelete

Powered by Blogger.