Header Ads



"காலையில் எழுந்தவுடன் பந்தை சுழற்றி, வசியம் செய்யும் மகிந்த ராஜபக்ச"

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பாக ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விபரித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை பண்டாவளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நாளாந்த செயற்பாடுகள் தொடர்பில் அவர் விபரித்தார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் பேராசையுடன் செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் உயர்ந்த இடத்திற்கு சென்று கீழ் நிலைக்கு வருவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் இலங்கை வரலாற்றில் அவ்வாறான ஒருவர் மாத்திரமே இருக்கின்றார். அவர்தான் மகிந்த ராஜபக்ச.

அவரின் நாளாந்த செயற்பாடுகள் குறித்து ஒரு சகோதரர் எனக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பினார்.

காலையில் எழுந்தவுடன் அவர் வசியம் செய்யும் பந்தை சுழற்றுகிறார். மலர் தட்டை எடுத்துக்கொண்டு விகாரைக்கு செல்கின்றார். அதனை அடுத்து பிரதமர் பதவியை வழங்குமாறு கோரி அனைவரிடமும் கெஞ்சுகிறார்.

மோசடிக்கார நண்பர்களை சந்திப்பதற்கு பழங்களை எடுத்துக்கொண்டு சிறைச்சாலைகள் தோறும் செல்கிறார். தொடர்ந்து தம்மை பழிவாங்க முற்படுகிறார்கள் என தெரிவித்து மாலைப்பொழுதில் மீண்டும் அழுகின்றார்.

தம்மால் மோசடி செய்யப்பட்ட ட்ரில்லியன் கணக்கான நிதி தொடர்பாக இரவு நேரங்களில் புதல்வர்களுடன் உரையாடிவிட்டு நடுக்கத்துடன் மீண்டும் வசிய பந்தை சுழற்றிவிட்டு நித்திரை கொள்கிறார். என்றார் முதலமைச்சர் ஹரின்.

3 comments:

  1. சுவாரஸ்யமான கதை. இப்படியே பந்தைச் சுற்றிச் சுற்றி முரளியைவிட சிறந்த சுழல் பந்து வீச்சாளராகி விடப்போகின்றார் கவனம்.

    ReplyDelete
  2. Interesting remarks, during MR resting period!

    ReplyDelete
  3. பந்தைச் சுழற்றினாலும், குண்டைச் சுழற்றினாலும் ஒரு பருப்பும் இனி வேகப்போவதில்லை. இவரும், இவர் குடும்பத்தினரும் ஏழை மக்களிடம் பிடுங்கிய ஊழல்கள், சுரண்டல்கள் எல்லாம் அம்பலமாகியிருக்க வெட்கம், மரியாதை இல்லாமலா மீண்டும் அரசியல் பிச்சை கேட்டு வருகிறார்? இவருக்கு மட்டுமல்ல இவரின் குடும்பத்தில் எவருக்கும் அரசியலில் இனி இடமளிக்கப்படக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.