Header Ads



"சிங்கள மக்கள் பெரும்பான்மையாக காணப்படுவதினால், இலங்கையை சிங்கள நாடு என கூறிவிட முடியாது"

இலங்கையில் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருவதினால் சிங்கள நாடாகி விடாது என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற நீதிமன்ற கல்வீச்சு தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது இந்த சிங்கள நாட்டில் எனும் சொற்பிரயோகத்தை மேற்கொண்டமையின் காரணமாகவே நீதியமைச்சர் அவரை இவ்வாறு சாடியுள்ளார்.

இது இலங்கை எனும் நாடு. இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பல்லின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். சிங்கள மக்கள் பெரும்பான்மையாக காணப்படுவதினால் இலங்கையை சிங்கள நாடு என கூறிவிடவும் முடியாது, அவ்வாறு மாறவும் மாறாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகவியலாளர் என்ற வகையில் தாங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும், இனவாத கண்ணோட்டத்தில் கேள்விகள் எழுப்புவதை தவிர்க்குமாறும் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஊடகவியலாளருக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

2 comments:

  1. நியாயமாகப் பார்த்தால், இது இயக்கர் - நாகர்களின் தீவு.
    மற்ற அனைவரும் வந்து குடியேறியவர்கள்தான் - சிங்களவர்கள் உட்பட.

    உதவாத உரிமைப் பிரச்சினைகளைக் கைவிட்டு நாட்டை மீள உருவாக்குவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.

    ReplyDelete
  2. Very good we appreciate that

    ReplyDelete

Powered by Blogger.