Header Ads



அதாஉல்லாவுக்கு மற்றுமொரு இழப்பு (படங்கள் இணைப்பு)


அக்கரைப்பற்று மாநகரசபையின் பிரதி மேயரும், முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி பிரமுகருமான எம்.எம். றிஸாம் - மு.காங்கிரசில் இணைந்து கொண்டார். 

மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் - கடந்த வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்றில் அமைந்துள்ள பிரதி மேயர் றிஸாமின் இல்லம் சென்று அவரைச் சந்தித்தார்.

இதன்போது, மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமிடம், பிரதி மேயர் றிஸாம் தனது இணைவினை உறுதிப்படுத்திக் கொண்டார். 

மு.கா. தலைவர் ஹக்கீமுடன் அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவரும் பிரதி மேயர் றிஸாமின் சிறிய தந்தையுமான எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம். நஸீர் மற்றும் ஏ.எல். தவம் உள்ளிட்டோரும் பிரதி மேயர் றிஸாமுடனான இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். 

இதன்போது, பிரதி மேயர் றிஸாமின் ஆதரவாளர்களும் அங்கு வருகை தந்திருந்தனர். 

அமைச்சர் அதாஉல்லாவுடனும் அவரின் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கடந்த சில காலமாக – பிரதி மேயர் றிஸாம் அதிருப்தியடைந்த நிலையில் இருந்து வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 


4 comments:

  1. Avar minnister illa thaaney..appo disappointed than

    ReplyDelete
  2. புழைப்பிலேயே ரெம்ப கேவலமான புழைப்பு அரசியல் தான் அதிிலும் நம்ம முஸ்லிம் அரசியல் பாதி(வாதி)கள் இருக்காங்களே இவங்களுக்கு சூடு சுரணை எதுகுமே கடையாது . வயிற்று பிழைப்பு வருமான குவிப்பு அரசியல் தான் இவங்களுடையது. ஆனால் பேசும்போது மட்டும் முஸ்லிமகள் முஸ்லிம் சமுகம் அல் குர்ஆன் அஸ்ஸுன்னா இப்படி கதைவிர்ராங்க. மு.கா. தலைவருக்கே தாடி இல்லை ஆனால் பேசுவது அகுர்ஆன் அஸஸுன்னா ம்ம்ம்

    ReplyDelete
  3. Madeena education serves any purpose with these petty politicians / comedians ?
    Poor Madeni !

    ReplyDelete
  4. இந்த றிஸாம் என்பவர் அதாவுல்லாஹ்வின் கட்சியிலிருந்து விலகியதால் அதாவுல்லாஹ்விற்கு ஏற்பட்டிருக்கும் இழப்பும் திஸ்ஸ அத்தநாயக்க UNP யிலிருந்து விலகியதால் UNP யிற்கு ஏற்பட்ட இழப்பும் ஒன்றுதான். ஏனென்றால் அவர்கள் இருவருக்கும் இருக்கின்ற ஆதரவாளர்கள் அவர்கள் இருவர் மட்டும்தான். றிஸாம் பெற்ற வாக்குகள் அக்கரைப்பற்று மக்கள் அதாவுல்லாஹ்விற்காக அளித்த வாக்குகளேயன்றி றிஸாமிற்குரிய வாக்குகளாக ஒருபோதுமில்லையென்பது றிஸாமிற்கும் நன்றாகத்தெரியும். அக்கரைப்பற்று மக்கள் றிஸாம் அவர்களை அரசியலில் ஒரு பதராகத்தான் பார்க்கின்றனர் என்பதால் பதர் நீங்கியதால் அதாவுல்லாஹ்வின் கட்சியின் பெறுமானம் நிச்சயமாக மேலும் அதிகரிக்குமேயன்றி குறைவடையாது.

    ReplyDelete

Powered by Blogger.