Header Ads



சபாநாயகரின் இல்லத்தில் மஹிந்த - மைத்திரி சந்திக்கிறார்கள்..!

எதிர்வரும் புதன் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளது. சபாநாயகர் சமால் ராஜபக்ஸவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான டிலான் பெரேரா, லசந்த அழகியவன்ன மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோர் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முரண்பாடுகளை களைவதற்கு இந்த சந்திப்பு ஓர் வாய்ப்பாக அமையும் என உறுப்பினர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதியை அழைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் போன்ற உயர் பதவி வகிப்பவர் ஒருவர் அனுப்பி வைக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளைள, சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அலுத்கமகே, ரி.பி.ஏக்கநாயக்க மற்றும் காமினி லொக்குகே ஆகியோர் செவ்வாய்க்கிழமை கூடி, முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையிலான கூட்டம் தொடர்பிலான நிகழ்ச்சி நிரலை தயாரிக்க உள்ளனர்.

No comments

Powered by Blogger.