Header Ads



நடுக்கடலில் உடைந்த படகுகளுடன், காத்திருக்கும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள்..!

ஆயிரக்கணக்கான மியன்மார் ரொஹிங்கியாக்கள் மற்றும் பங்களாதேஷ் குடியேறிகள் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடற்பகுதியில் நிர்க்கதியான நிலையில் உதவியை எதிர்பார்த்து தொடர்ந்தும் காத்திருப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான நிலையம் மற்றும் சர்வதேச குடியேறுவோர் அமைப்பு குறிப்பிட்டுள்ளன.

இந்த இரு அமைப்புகளினதும் பிரதிநிதிகள் பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் நேற்று கூட்டாக நடத்திய ஊடக சந்திப்பில், மீட்பு நடவடிக்கைக ளுக்கு 26 மில்லியன் டொலர் சர்வதேச உதவியை கோரினர்.

இந்த குடியேற்ற பிரச்சினையில் சிக்கியிருக்கும் சுமார் 10,000 பேரை மீட்பது, மீள்குடியேற்றுவது அல்லது திருப்பி அனுப்பும் நடவடிக் கைகளுக்காகவே இந்த உதவி கோரப்பட்டுள்ளது. மலே'pயாவுக்கு அருகில் இருக்கும் கடற்பகுதியில் மியன்மாரின் ரகினே மாநிலத்தில் இருந்து வந்த சிறு படகுகளில் குறைந்தது 2,621 பேர் நிர்க்கதியான நிலையில் தொடர்ந்தும் தத்தளிப்பதாக ஐ.நா. அகதிகளுக்கான பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு நிர்க்கதியானவர்களின் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று குறிப்பிட்ட ஐ.நா. பிரதிநிதி, தம்மிடம் இருக்கும் கணிப்புகள் மிக மிக பழையவை என்றார்.

"நாம் கடக்கும் ஒவ்வொரு மணிநேரமும் காப்பாற்றப்படவேண்டிய அபாயகரமான சூழலில் மக்கள் உள்ளனர். நாம் இப்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் எண்ணெய் இன்றியும், தண்ணீர் இன்றியும், உணவு இன்றியும் கரையொதுங்கும் எதிர்பார்ப்புடன் உடைந்த படகுகளில் காத் திருக்கின்றனர்" என்று ஐ.நா. அகதிகளுக்கான நிலையத்தின் பிலிப்பைன்ஸ் நாட்டு பிரதிநிதி பெர்னாட் கெர்ப்லட் குறிப்பிட்டார்.

குடியேறிகளின் பிரச்சினை தீவிரமடைந்து நேற்று புதன்கிழமையுடன் 27 தினங்கள் எட்டப்பட்டிருக்கும் நிலையில் இதுவரை இந்தோ னே'pய, மலே'pய மற்றும் தாய்லாந்து கடற்கரைகளில் குறைந்தது 3,302 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 1,013 பேர் மியன்மார் அல்லது பங்களாதே'{க்கு திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.

பிராந்தியத்தில் தற்போது மோதிகமான படகுகளில் நடமாட்டம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த தஞ்சப்படகும் திருப்பி அனுப்பப்படவில்லை.

1 comment:

  1. Please we want to give pressure to resign the Commissioner of the UNHRC immediately. Because, He is useless at the movement.

    What is Muslim world doing now except Turky for Myanmar Muslim?

    ReplyDelete

Powered by Blogger.