Header Ads



தன் வாழ்வின் சுவையான அனுபவத்தை இழந்துவிட்ட, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குரு

உலகம் முழுவதும் வாழும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை குருவாக விளங்கும் போப் பிரான்சிஸ் தனது வாழ்வில் சுவையான அனுபவம் ஒன்றை இழந்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.

அர்ஜெண்டினா நாளிதழ் ஒன்றிற்கு போப் பிரான்சிஸ் அளித்துள்ள பேட்டியில், கால்பந்தாட்ட ரசிகரான நான் 1990ம் ஆண்டில் இருந்து தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.

இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் கிடையாது, நான் மேரி மாதம் மீது சத்தியம் செய்தேன், இனிமேல் நான் தொலைக்காட்சி பார்க்க மாட்டேன் என்று, அந்த சத்தியத்தை இன்றுவரை காப்பாற்றி வருகிறேன்.

அவ்வாறு கால்பந்தாட்டத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், எனது மெய்காப்பாளரிடம் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை பற்றி கேட்டு தெரிந்துகொள்வேன்.

தலைமை போப்பாக பதவியேற்ற பின்னர், பணிச்சுமை எனக்கு அதிகரித்துவிட்டது, ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை கையாளும் நான் வாழ்வில் ஒரேயொரு சுவையான அனுபவத்தை இழந்துவிட்டேன்.

எனக்கும் பீட்ஸா மிகவும் பிடிக்கும், ஆனால் முன்பை போல் கடைகளுக்கு சென்று பீட்ஸாவை சாப்பிட முடிவதில்லை, அதே சமயம் பார்சல் மூலம் வரவழைத்து சாப்பிடும் பீட்ஸாவுக்கும், கடைகளுக்கு சென்று அங்கேயே அமர்ந்து ருசிக்கும் பீட்ஸாவுக்கும் வேறுபாடு உள்ளது என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.