Header Ads



தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவும், பிரதேசவாத சிந்தனையும்..!

-பர்ஹான்-

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவுக்காக 3 பேர்களின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தெரிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது. உபவேந்தர் தெரிவு அடுத்த வாரமளவில் வெளிவரும். இதில் கவலையான விடயம் யாதெனில், உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பில் கூடுதலான வாக்குகளைப் பெற்ற பேராசிரியர் நாஜிம் அவர்களுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பேராசிரியர் நாஜிமின் தகைமையை விமர்சனத்துக்கு உட்படுத்துவது பிரதேசவாத சிந்தனையை அடிப்படையாக கொண்ட காழ்புணர்ச்சி என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

ஜனாதிபதியின் தெரிவுக்கு சிபாரிசு செய்யப்பட்ட 3 கல்விமான்களும் திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும் இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் மற்றும் ஏனைய மதிப்பீடுகளின் அடிப்படையில் ஜனாதிபதி ஒருவரை உபவேந்தராக தெரிவு செய்வார். நல்லாட்சியின் அடையாளமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு அமையவேண்டும் என்பதே எல்லோரினதும் பொதுவான எதிர்பார்ப்பு.

இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம் பேராசிரியர் நாஜிமின் தகைமைகளை பிரதேசவாத சிந்தனை கொண்ட சிலர் கேள்விக்கு உட்படுத்துவதாகும். அவரது திறமையை, தகைமையை நிரூபிப்பது அல்ல இவ்வாக்கத்தின் நோக்கம். இப்பிரதேசவாத சிந்தனைதான் இப்பல்கலைக்கழகத்தின் வீழ்ச்சிக்கு காரணம் என்பதை இன்னும் சிலர் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றனர். பௌதிக ரீதியான அற்ப காரணங்களை முன்வைத்து இப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவர்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வர வேண்டுமென்ற கோரிக்கை இப்பிரதேச புத்திஜீவிகளை அவமானப்படுத்தும் செயலாகும். அவர்களது திறமையை கேள்விக்குட்படுத்துவதாகும், ஏனெனில் அவர்களது திறமையை விட இங்கு பிரதேசவாத நியாயங்களே முன்வைக்கப்படுவதாகும். திறமையான ஒருவர் எப்பிரதேசத்தவராகினும் தமது திறமையை வெளிக்காட்டி தெரிவு செய்யப்பட வேண்டுமென்பதே நியாயமானது.

நடிகர் நெப்போலியன் கூறுவது போன்று கலியாண வீடு என்றாலும் நான்தான் மாப்பிள்ளை, சாவு வீடு என்றாலும் நான்தான் பிணம் என்பது போலவே இவர்களது பிரதேசவாத சிந்தனையும் நியாயப்படுத்தலும் உள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவு செய்யப்படுகின்ற ஒருவருக்கு இன்று பெரும் சவாலாக பிரதேசவாத சிந்தனை இருக்கின்றமையை கடந்தகால கசப்பான அனுபவங்களின் ஊடாக கண்டு கொள்ளலாம். அதனது பாதிப்புகள் மதிப்பிட முடியாது. பிற்போக்குத்தனமான, சவால்களை எதிர்கொள்ள முடியாத, சுயநலன் கொண்ட சிலரின் செயற்பாடுகளே இப்பிரச்சினை தோன்றுவதற்கான அடிப்படைக் காரணங்களாகும். இச்சிந்தனையிலிருந்து எப்போது விடுபடுகின்றோமோ அப்போதே தென்கிழக்கு பல்கலைக்கழகம் உண்மையான அபிவிருத்தியைக் காணும்.

மேலும் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவில் அரசியல் தலையீடு செய்யுமாறு அரசியல்வாதிகளை வேண்டுவது, கோரிக்கைகள் விடுப்பது ஒருவகையில் அரசியல்வாதிகளை அச்சுறுத்துவது போன்றதே. இப்பிரதேசம் சாராத ஒருவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக வருவதன் ஊடாக அவர்களது அரசியல் எதிர்க்காலத்தை கேள்விக்கு உட்படுத்த முடியும் என்ற தொனியில் கருத்து வெளியிடுவது ஆரோக்கியமாகாது. கடந்தகால உபவேந்தர் தெரிவில் ஜனாதிபதியிடம் கருணா அம்மான் போன்றோரின் சிபாரிசுகளை பெற்றுக் கொடுத்தது நான்தான் என்று சந்தியில் நின்று வீராப்பு பேசிய சம்பவங்கள் போன்று இனியும் இடம் பெறாமல் இருக்க வேண்டும். இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவு சுதந்திரமாக இடம் பெற வேண்டும்.

இங்கு தனிநபர் நலனுக்கும் அப்பால் சமூகத்தின் சொத்தாகிய பல்கலைக்கழகத்தின் எதிர்கால நலன் முன்னிறுத்தப்பட வேண்டும். குறுகிய அரசியல், பிரதேசவாத சிந்தனைகள் இப்பல்கலைக்கழகத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக இருந்துவிடக் கூடாது என்பதில் யாரும் மாற்றுக்கருத்தை கொண்டிருக்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.

4 comments:

  1. Dear Farhan

    You have made it clear; we need a chancellor to the university who qualifies through existing legal means of selection process, that is the symbol of good governance and real way forward to develop SEUSL... it could be anyone and it is the justice as well.
    Instead backing someone because of his/her gender or the birth place.......etc (for their own personal gaining) is the same politics our politicians are playing; I surprise what is the difference between these so called academics and our sheep politicians (not all)

    ReplyDelete
  2. Dear Farhan,

    Thank you for your statement. I also agree with your statements. The president also will take good decision in appoint the VC for SEUSL.

    ReplyDelete
  3. Dont allow the political game here, we need to select qualified person whether he east or west

    ReplyDelete
  4. இந்த உப வேந்தருடன் சேர்ந்து மிகவும் முக்கியமான பாத்திரம் பதிவாளர் ( Registrar ) ஆகும். அவர் எப்படிபட்டவர், யார் என்றும் சற்று பாருங்கள் அப்பா....! ஜாபர் சாதிக் சேருக்கு பிறகு இருந்த அனைவரும் பெரும் ஊழலும் குழப்பமும் நிறைந்தவர்களாகவே உள்ளார்கள். நிர்வாக ரீதியாக இவர்தான் நிறைய விடயங்களில் உப வேந்தருக்கு வழிகாட்டியாக உள்ளார். அதே போல் நிதிவிடயங்களுக்கு Bursar ஆகும். இவர்கள் இருவரும் மிக மிக முக்கியமானவர்கள்.

    இந்த பல்கலை கழகத்துக்கு ஒதுக்கப்படும் பணம் சரியாக பாவிக்கப்படாமல் திரும்பவும் திறைசேரிக்கே செல்வது தான் நிறைய வருடங்களில் நடந்துள்ளது ஒரு விடயத்தை கலந்துரையாடுவதட்கு ஓன்று கூடினார்கல் என்றால் அவ்விடம் நாயும் கரிச்சட்டியுமகவே இருக்கும். கடைசியில் முடிவு எதுவும் எடுக்காமல் களைந்து விடுவார்கள்.

    பர்ஹான், மூவரும் திறமையானவர்கள் என்றால் யாராவது ஒருவர் இருந்து விட்டு போகட்டுமே. இந்த கட்டுரையும் ஒரு வகையான அரசியல் போன்றே தெரிகிறது. இந்த முவரும் யார்? அவர்களின் துறை கல்வி தகைமைகள். சமூக ரீதியாக அவர்களுது ஈடுபாடு என்ன? போன்ற விடயங்களை கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். Dr. Safina, Dr.Najim.. மற்றவர் யார்? புரியவில்லையே?

    எது எப்படியோ ஒரு சமூகம் சம்பந்தமான விடயத்தில் அக்கறை காட்டும் பர்ஹான் அவர்களுக்கு எமது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.