Header Ads



'இலங்கையில் இன்று, என்ன நடக்கவேண்டுமென தீர்மானிப்பது கமரூனும், கெரியும்..!

இலங்கையில் இன்று என்ன நடக்கவேண்டும் என்பதனை  பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர்  ஜோன் கெரியுமே தீர்மானிக்கின்றனர். மாறாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ  தீர்மானிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.  

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இல்லாமல்   சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்கால பயணம் இல்லை.   தேர்தலில் தோல்வியடைந்த ஒரு தலைவருக்கு  இதுபோன்ற  ஒரு மக்கள் வரவேற்பு எங்கும் இருந்ததாக நாங்கள் எங்கும்  பார்த்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ஆகவேண்டுமா இல்லையா என்று எனக்குத்  தெரியவில்லை. ஆனால்  மஹிந்த ராஜபக்ஷ இல்லாமல்   சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிர்கால பயணம் இல்லை. இதனை  சுதந்திரக்கட்சி  புரிந்துகொள்ளவேண்டும். 

சுதந்திரக் கட்சியின் எதிர்கால பயணத்தில் மஹிந்த ராஜபக்ஷ கட்டாயம் பங்குதாரராக இருக்கவேண்டியது அவசியமாகும்.   பிரதமர் பதவி குறித்து நான் ஒன்றும் கூற முடியாது.  ஆனால் சுதந்திரக் கட்சியானது   மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து  முன்செல்வது அவசியமாகும்.  தேர்தலில் தோல்வியடைந்த ஒரு தலைவருக்கு  இதுபோன்ற  ஒரு மக்கள் வரவேற்பு எங்கும் இருந்ததாக நாங்கள் பார்த்ததில்லை. அந்தளவுக்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு  மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. 

இதேவேளை நாட்டில் தற்போது இடம்பெறும் சில நிகழ்வுகள் திருப்தியளிப்பதாக இல்லை.  குறிப்பாக வடக்கில்  கடந்த சில தினங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியளிக்கவில்லை. 

ஆனால் ஒரு விடயம் நன்றாக புரிகின்றது. அதாவது  இலங்கையில் இன்று என்ன நடக்கவேண்டும் என்பதனை  பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூனும் அமெரிக்க இராஜாங்க செயலர்  ஜோன் கெரியுமே  தீர்மானிக்கின்றனர். மாறாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது  பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ  தீர்மானிக்கவில்லை. இந்த விடயம் நன்றாக புரிகின்றது. 

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளும் எண்ணம் எதுவும் இல்லை.   நான் சுதந்திரக் கட்சியில்  அரசியல் செய்யவே  முயற்சிக்கின்றேன். அதனை  தொடர்ந்து செய்வேன் என்றார்.  

2 comments:

  1. GOOD , WE ARE HAPPY , CAMROON IS A GOOD PERSON , A GOOD LEADER

    ReplyDelete
  2. This is very wrong statement. If mahinda will Take power at any way, they can escape from the legal action. That is why they are telling like this.

    ReplyDelete

Powered by Blogger.