Header Ads



மஹிந்த - மைத்திரிபால சந்திப்பு பற்றி, குழப்பகரமான 3 தகவல்கள்..!


1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நாளை சந்திப்பு நடத்தப்பட உள்ளது. நாளை பிற்பகல் 2.30 இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை உறுதி செய்துள்ளது.

2

 நாளைய தினம் முன்னாள் ஜனாதிபதிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா அறிவித்திருந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவுகள் கிடையாது எனவும் திட்டமிட்டப்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் சந்திப்பு நடத்தப்படும் எனவும் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

3

எனினும் இந்த சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு எதுவும் தெரியாது என மஹிந்தவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு நடத்த விரும்பவில்லை என பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. Why they are going to meet

    ReplyDelete
  2. இதை வச்சு 'காமடி' ஏதும் பண்ணாத வரை சரிதான்!

    ReplyDelete

Powered by Blogger.