Header Ads



நச்சுப் பாம்பு, சாரைப் பாம்பு ஆகியது - ரணில் எடுத்த முயற்சிகள் தோல்வி - விமல் வீரவன்ச

நச்சுப் பாம்பு போன்ற 19வது திருத்தத்தை பாராளுமன்றிற்கு கொண்டுவர நினைத்த போதும் இறுதியில் நிறைவேற்றப்பட்டது சாரைப் பாம்பு போன்ற 19வது திருத்தம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியடம் காணப்பட்ட அதிகாரங்களை பிரதமர் வயப்படுத்தி கொள்வதற்காக எடுத்த முயற்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

19வது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட போது எதிர்கட்சித் தலைவரின் பணியை செய்தது தினேஸ் குணவர்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாப்புச் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்றி தமக்கு ஏற்றவர்களை நியமிக்க எடுத்த முயற்சியை தோல்வியடைய செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிந்தது என சோபித்த தேரர் மார்தட்டி கொள்ள கூடும் எனவும், தனது திட்டம் தவறியதால் பிரதமர் கவலையில் இருக்கக் கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 comments:

  1. மிகப் பெரிய நச்சுப் பாம்பு நீ. இப்போது உங்க எதிர்பார்ப் பெல்லாம் சாய்ந்துவிட்டதே. இனி, புதிய ஒரு தொழிலைப் பார்த்து ஒதுங்குவது புத்திசாலித் தனம். மஹிந்த மஹிந்த என்று இனி ஊது குழல் ஊதினாலும் பயனில்லை. நேற்று பேரிடி விழுந்துவிட்து. பாய் பாய் விமல் ஐயா.

    ReplyDelete
  2. உன்னையும் உன்வளிகாட்டியையும் தெருவுக்கு அனுப்ப எடுத்த முடிவுதான் இது வாய பொத்திட்டு சும்மா இரு

    ReplyDelete
  3. குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்.மஹிந்த தயவில் ஒரு சிற்றரசராக காலத்தை கழிக்க எண்ணி யிருந்தார்.அந்த நினைப்பில் நேற்று விழுந்தது ஒரு லோட் மண்.மனிசன் அதற்சியில் ஆடிப்போய்விட்டார்.அதுதான் இப்படி பிதட்டுகிறார்.

    ReplyDelete
  4. தண்ணிப் பாம்பு சாரைப் பாம்பைப் பார்த்துக் கவலைப் படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.