Header Ads



எஞ்சியுள்ள ராஜபக்ஷவினரையும் விலக்கி தள்ளி, புதிய பாராளுமன்றத்தை உருவாக்க மக்கள் உதவ வேண்டும்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தை தோற்கடிப்பதற்கான தேவை சிலருக்கு இருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்களை சந்தித்து உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 100 நாட்கள் மக்கள் நலனுக்கான பல வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எந்த அரசாங்கமும் இவ்வாறு செய்ததில்லை. 19ம் திருத்தச் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முயற்சிக்கிறது.

ஆனால் மோசடிக்காரர்களை பாதுகாக்க முற்படுகின்ற நாடாளுமன்றத்தில் இதனை மேற்கொள்ள முடியாது என்றால், புதிய நாடாளுமன்றம் ஒன்றை வழங்குமாறு பொது மக்களை கோருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மகிந்தராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தோற்கடித்திருந்தார்.

இனி எஞ்சியுள்ள ராஜபக்ஷவினரையும் விலக்கி தள்ளி, புதிய நாடாளுமன்றத்தை உருவாக்க மக்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதற்கிடையில், இதுவரையில் மக்களை புறந்தள்ளி, நாடாளுமன்றத்தை மதிக்காமல் செயற்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை, நாடாளுமன்றத்தின் கம்பளத்தில் ஒருநாள் இரவை கழிக்க வைத்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவே புதிய அரசாங்கம். கம்பளத்துக்கு மேல் சென்றவர்களை கம்பளத்துக்குட்பட்டவர்களாக மாற்றி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் போராட்டம்நடத்தியவர்கள் தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார்.

No comments

Powered by Blogger.