Header Ads



மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசி இலங்கையில் அறிமுகமாகிறது

மே முதலாம் திகதியில் இருந்து போலியோ தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நடைமுறையிலுள்ள சொட்டு மருந்து வழங்கும் திட்டத்துடன் இணைந்ததாக புதிய தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் பபா பலிஹவடன கூறியுள்ளார்.

தேசிய நோய் எதிர்ப்பு திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறைக்கு அமைய 4 மாத குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.

போலியோ வைரஸை உலகளாவிய ரீதியில் ஒழிக்கும் வகையிலேயே புதிய திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே 65 நாடுகளில் போலியோ தடுப்பூசி பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையில் 1993 ஆம் ஆண்டுக்கு பின்னர் போலியோ நோயாளர்கள் பதிவாகவில்லை.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலேயே தற்போது அதிகளவில் போலியோ நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.