Header Ads



விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை வழங்கும்படி, சவூதி அரேபியா கோரிக்கை

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு எதிராக தாக்குதல் நடத்தும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதே நேரத்தில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக உதவி வருகிறது.

சவுதி அரேபியாவுக்கு 10 நட்பு நாடுகள் உதவுகின்றன. இந்த நிலையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தங்களுக்கு உதவும்படி பாகிஸ்தானிடம் சவுதி அரேபியா கோரிக்கை விடுத்துள்ளது.

தங்களுக்கு விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை வழங்கி உதவும்படி கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் ராணுவ வீரர்களை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து விவாதிக்க பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் நடந்தது. அதில் பேசிய ராணுவ மந்திரி ஹவாஜா ஆசிப் இந்த தகவலை தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க பாகிஸ்தானின் நட்பு நாடான ஈரானின் வெளியுறவு மந்திரி முகமது ஜாவத் ஷரீப் நாளை (8–ந்தேதி) இஸ்லாமாபாத் வருகிறார். அவருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு தான் சவுதி அரேபியா கோரிக்கை ஏற்கப்படுமா? என தெரியவரும்.

ஏமனில் சவுதி அரேபியா குண்டுவீச்சு நடத்துவதை ஈரான் ஏற்கனவே விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. நேட்டோவை விட மிகப் பெரிய சக்திவாய்ந்த இராணுவ கூட்டமைப்பு என்று சொன்னார்கள், பத்து நாள் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை, பாகிஸ்தானின் காலைப் பிடிக்கின்றார்கள். அடுத்ததாக இஸ்ரவேலின் *****ஐ பிடித்தாலும் ஆச்சரியம் இல்லை.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைகும்
    ஜப்னா முஸ்லிமிடம் ஒரு வினா
    இச்செய்தி எங்கிரிந்து கிடைத்தது
    பாகிஸ்தான் எந்த உதவி தேவைப்பட்டாலும் தரத் தயார் என ஏற்கனவே அறிவித்து விட்டது
    காரணம் பாகிஸ்தானுக்கு சவ்தி அரேபியா உதவி செய்த போல எந்த நாடும் உதவவில்லை
    எப்போதோ தாஇபில் கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டாச்சு
    அடுத்தது இந்த இட்லி இஸ்டார் எப்போ சவ்தி பற்றி செய்தி வந்தாலும் மல்லு கட்டிக் கொண்டு விமர்சிக்கிராறு என் எண்ணம் இந்த ஸ்டார் ஒன்று ஈரானுக்கு வால்பிடிக்கும் ஒரு ஷியாக்காரன்
    அல்லது சவ்தி மீது அதி உற்ச வெறுப்புக் கொண்|டுள்ள ஒரு இயக்க வெரியன்
    ஈரானாலும் ஷியா வெறியர்களாலும் இஸ்லாமிய உலகம் எந்தளவு சின்னாபின்னப்பட்டுள்ளது என்பதை அறியா ஒருவர் இருக்க முடியாது ஜப்னா முஸ்லிமிடம் ஒரு தயவான வேண்டுதல் கேமண்ட் பண்ணும் போது அநகரிகமாக எழுதுபவர்களின் கேமாண்டை பதிவு செய்வது உங்களையும் ஒரு பக்கச் சார்பானவர்கள் என்பதை காட்டுகின்றது

    ReplyDelete
  3. ரிப்ளான், உங்கள் கருத்திற்கு எதிராக, அல்லது வஹ்ஹாபிச கருத்திற்கு எதிராக ஒருவன் சிந்திக்கின்றான் என்றால், கருத்து வெளியிடுகின்றான் என்றால், அந்த கருத்துக்களை தடை செய்ய உடனே செய்ய வேண்டியது ஷியா முத்திரை. இதே வேலையைத்தான் டாக்டர் இல்யாஸ் அவர்களுக்கும் செய்கின்றார்கள்.

    நான் ஒன்றும் ஷியா கிடையாது. சவுதியின் காட்டுமிராண்டித் தனங்களையும், மனம் வறண்ட பாலைவன அரேபியர்களின் கொடூரங்களையும் சரிகான வேண்டிய தேவை எனக்கு இல்லை.

    என்னை போலவே, உங்களுக்கும் உங்கள் கருத்தை பதியவோ, எனது கருத்தக்களுக்கு மறுப்பு சொல்லவோ உரிமை உள்ளது, ஆகவே அதனை பயன்படுத்திக் கொள்வதை விட்டுவிட்டு, எனது கருத்துக்களை முடக்க நினைப்பது கோழைத்தனமான செயலாகும்.

    ஷியா இல்லாத ஒருவனை ஷியா என்று சொல்வது கூட அநாகரீகமானதே, அப்படியானால் நீங்கள் கொமன்ட் பண்ணியே இருக்கக் கூடாதே?

    ReplyDelete

Powered by Blogger.