பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து, லட்சக்கணக்கில் அபராதம் வசூலிக்கும் பணியை பிரிட்டன் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள, இந்திய, சீன உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் கார் கழுவுமிடங்களில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். விசா காலம் முடிந்தும், அங்கேயே சட்ட விரோதமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அவர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும், பிரிட்டன் அரசு முடிவு செய்தது. இதையடுத்து, இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நடத்தும் உணவகங்களில், அந்நாட்டு குடியேற்ற (இமிகிரேஷன்) அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தினமும் சராசரியாக, 40 வெளிநாட்டினர் கைது செய்யப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களிடம் இருந்து, தலா 18.63 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டவிரோதமாக தங்கியிருந்த, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்க தேசத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், இவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்த, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தில், 9.31 கோடி ரூபாயும், சீன உணவகம் மீதான அபராதத்தில், 4.65 கோடி ரூபாயும் நிலுவையில் உள்ளது.
.png)
Make sure this news is true. They only fine the employer not the illegal employee .
ReplyDelete