Header Ads



மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு, 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு..!

மன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) ஆரம்பமான மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெற்றோலியத்துறையின் விநியோகம், தரம், விலை ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான மாநாடு கொழும்பில் இன்று (27) நடைபெற்றது.

இலங்கை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பெற்றோலிய துறையின் எதிர்காலம் குறித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்தார்.

2 comments:

  1. "எண்ணைவள பேசாலை மன்னாரில் உண்டு" என்று 1960 களில் தனது "இலங்கை என்பது நம் தாய்த் திருநாடு" என்கின்ற பாடலில் பாடினார் பொப்பிசைச் சக்கரவர்த்தி A.E. மனோகரன், ஆனால் 50 ஆண்டுகள் கழிந்தும் இன்னுமும் எண்ணையும் இல்லை, கேஸும் இல்லை......

    ReplyDelete
  2. Kannaammoochi vilaiyaattu of politicians keep on says but ,maybe next generation of Sri Lankans will utilize of our production?never know who is going to grab again the source of income in sri lanka

    ReplyDelete

Powered by Blogger.