Header Ads



டேவிட் கேமரூன் கோழிக் குஞ்சு போன்று பயந்தோடுவது ஏன்..?

தொலைக்காட்சியில் நேருக்கு நேராக நின்று விவாதம் செய்ய இங்கிலாந்து பிரதமர் பயப்படுகிறார் என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் பொது தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நாட்டின் பிரதமர் அங்குள்ள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் அனைத்து கட்சி தலைவர்களுடனும் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம்.

எதிர்வரும் மே மாதத்தில் நடைபெற இருக்கும் பொதுத்தேர்தல் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்க பிரதமர் டேவிட் கேமரூனுக்கு எதிர்கட்சியினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி விவாத ஏற்பாட்டாளர்களுக்கு கேமரூன் நேற்று அனுப்பிய மின்னஞ்சலில்(Email), தான் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக சந்தித்து விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என்றும் குறிப்பாக இங்கிலாந்து நாட்டின் முக்கிய எதிர்க்கட்சி தலைவரான Ed Miliband அவர்களுடன் விவாதத்தில் பங்கேற்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.

மேலும், விவாதத்தின் இறுதியில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் மேடையில் இருக்கும்போது அவர்களிடம் கூட்டாக ஒரே ஒரு முறை மட்டும் விவாதிக்க தயார் என்று குறிப்பிட்டிருந்தார்.

கேமரூனின் இந்த முடிவு எதிர்க்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

நேருக்கு நேராக விவாதிப்பதை தவிர்த்து கேமரூன் கோழிக்குஞ்சு போல் பயந்து ஓடுகிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து எதிர்கட்சி தலைவர் Ed Miliband, கேமரூனின் முடிவு எதிர்க்கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும், விவாதத்திற்கு பயந்து கேமரூன் எவ்வளவு தூரம் ஓடுகிறார் என பார்க்கலாம் எனவும் விமர்சித்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் முன்னால் செயலாளரான Alastair Campbell கூறுகையில், பொதுமக்கள் முன்னிலையில் அனைத்து தலைவர்களிடமும் தனித்தனியாக விவாதம் செய்ய மறுத்தது ஒரு கோழைத்தனமான முடிவு என்றும் ஜனநாயகத்திற்கு எதிரான போக்கு எனவும் கண்டித்துள்ளார்.

No comments

Powered by Blogger.