Header Ads



முகமது நபியின் இளம்பிராயம் குறித்த, ஈரானிய திரைப்படத்தினால் சர்ச்சை - ஏ.ஆர். ரகுமான் இசை

முகமது நபியின் இளம்பிராயம் குறித்த ஈரானியத் திரைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்களின் புனித நூலான குரானில் இடம் பெற்றுள்ள முகமது நபியின் இளம்பிராய வாழ்க்கை வரலாறு, "முகமது: இறைவனின் தூதர்' என்ற தலைப்பில் ஈரானில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த நாட்டின் அல்லாயர் என்ற கிராமத்தில், ஏராளமான பொருள் செலவில் மெக்கா நகரைப் போலவே "செட்' அமைத்து இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் முகமது நபியின் உருவம் காண்பிக்கப்படாமல், பிற கதாப்பாத்திரங்களின் மூலம் அவரது வரலாறு விளக்கப்படுகிறது.

எனினும், திரைப்படத்தில் முகமது நபி, பின்புறமாக காட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முஸ்லிம்களின் ஒரு பிரிவினரிடையே இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

முகமது நபியின் புற வடிவத்தை படமாக வெளியிடுவதற்கு பெரும்பாலான மதத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

"முகமது' படத்துக்கு உலகின் பிற பகுதிகளிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளதால், அந்த நாட்டிலேயே மிகப் பெரும் பொருள் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் படம் வெளியிடப்படுவது கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் இறைத்தூதர் டமஸ்கஸ்ஸிற்கு செல்வது வரை திரைப்படம் அமைந்துள்ளது. எனினும் குழந்தையாகக் கூட நபியை சித்தரிப்பதை நிராகரிப்பவர்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்று சுன்னி முஸ்லிம்களின் மதிப்பிற்குரிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழகம் ஈரானை கேட்டுக் கொண்டுள்ளது. ஆயினும் இறை தூதரின் வாழ்க்கை வரலாற்றைக் காட்டும் ஒரு பில்லியன் டொலர் திரைப்படத்தை தயாரிப்பது குறித்த அறிவிப்பை கட்டார் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. To All those who think that they trying to do spread the religion this way ( by films )... I have one question ? Yes

    Did any of the SALAF us saleheens (3 successful generation), staged any drama to public in this prupose ?

    What the SALAF practiced as ISLAM, Let us limit ourself... If we transgress in finding and following the way fo KUFFAR's to spread the DEEN, We are not spreading the DEEN of Allah, rather we are creating a New religion and new methodology of following KUFFAR in each an every acts they do.

    May Allah guide in the path of successful SALAF us saleheens ( SAHAABA, TABIEEN and AT-BAUTH TABIEENS)

    ReplyDelete
  2. @Muhammed Rasheed, என்ன மடத்தனமான சிந்தனை?

    நீங்கள் சொல்லும் முதல் மூன்று நூற்றாண்டில் கம்பியூட்டரும், CD க்களும், இண்டர்நெட்டும் இருந்ததா? அபப்டிஎன்றால் அவற்றை எப்படி இன்று பயன்படுத்துகின்றீர்கள், தஹ்வா செய்வதற்கு?

    நீங்கள் சொல்கின்ற சலப்பு சாளிஹீன்கள் லப்டப், ஸ்மார்ட் போன், வைபர் பயன்படுத்தினார்களா?

    ReplyDelete
  3. hey if you want to study about islam recite quran then you will learn what is islam. please don't do like this stupid things noone can consider prophet muhammadh sallallahu alaihi wasallam (peace upon him) is look like this. because its hidden thing don't break e-maan with like this stupid things

    ReplyDelete

Powered by Blogger.