Header Ads



யெமன் நாட்டை பாதுகாக்க 10 முஸ்லிம் களத்தில் - சவூதி அரேபியாவுக்கு ஈரான் எச்சரிக்கை

சவூதி அரேபியா மற்றும் பிராந்திய நாடுகள் இணைந்து யெமனில் சியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. யெமன் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி அரசுக்கு ஆதரவாகவே பிராந்திய நாடுகள் இத்தாக்குதலை நடத்தி வருகிறது.

எனினும் இந்த தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு ஈரான் வெளியுறவு அமைச்சர் சவூதி  அரேபியாவை வலியுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் யெமனின் இறைமையை மீறுவதென்றும் இரத்த வெள்ளத்தையே ஏற்படுத்தும் என்றும் வெளியுறவு அமைச்சர் முஹமது ஜவாத் சாரிப் எச்சரித்துள்ளார்.

யெமன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு சவூதி  அரேபியாவின் 100 யுத்த விமானங்கள், 150,000 படையினர், மற்றும் ஏனைய கப்பற் படையினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக சவூதி  அரச பத்திரிகையான அல் அரேபியா குறிப்பிட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸிலுடன் 10 நாடுகள் இந்நடவடிக்கையில் பங்கேற்றிருப்பதாக அமெரிக்காவுக்கான சவூதி  தூதுவர் அப்தல் அல் ஜ{பைர் குறிப்பிட்டுள்ளார். இவ்வான் தாக்குதல் கடந்த புதன்கிழமை இரவு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

"யெமனின் சட்டபூர்வ அரசுக்கு ஆதரவாகவும் அதனை பாதுகாக்கவும் பயங்கரவாத அஹ்தி இயக்கம் நாட்டை கைப்பற்றுவதை தடுக்கவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது" என்று வொ'pங்டனில் இருந்து உரையாற்றிய ஜ{பைர் குறிப்பிட்டார். சனாவில் ஹவ்திக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுகாதார அமைச்சு குறிப்பிடும்போது, சவூதி கூட்டணி யின் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 24 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தது.

யெமன் தலைநகர் சனாவின் சர்வதேச விமானநிலையம் மற்றும் ஏனைய பகுதிகளிலும் பாரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருக்கும் ஏ.எப்.பி. செய்தியாளர் விபரித்துள்ளார்;. யெமனில் ஹவ்திக்களின் கோட்டையாக இருக்கும் சாதா மாகாணத்தின் மலாஹீஸ் மற்றும் ஹப்ர் சுப்யான் பகுதிகளிலும் வான் தாக்குதல் நடத்தப்பட் டுள்ளது. சாதா மாகாணம் சவூதியின் எல்லையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யெமன் மீதான இராணுவ நடவடிக்கைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் 30 யுத்த விமானங்களை அனுப்பியிருப்பதோடு, பஹ்ரைன் எட்டு யுத்த விமானங்களையும், மொரோக்கோ மற்றும் ஜோர்தான் தலா ஆறு யுத்த விமானங்களையும் சூடான் மூன்று விமானங்களையும் உதவிக்கு அனுப்பி இருப்பதாக அல் அரேபியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இராணுவ நடவடிக்கையில் பங்கேற்பதை ஜோர்தான் உறுதி செய்துள்ளது. எகிப்தும் சவூதி கூட்டணியில் பங்கேற்றிருப்பதை அந்நாட்டு அரச வட்டாரம் உறுதி செய்துள்ளது. தவிர, பாகிஸ்தான் உட்பட மேலும் 4 முஸ்லிம் நாடுகள் யெமன் மீதான நடவடிக்கையில் பங்கேற்றிருப்பதாக சவூதி  அரேபியா அறிவித்துள்ளது.

குவைட் மூன்று எப்-3 யுத்த விமானங்களை சவூதியின் மன்னர் அப்துல்லாஹ் விமானத் தளத்திற்கு அனுப்பியதை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிசெய் துள்ளது. சவூதி அரேபியாவின் நீண்ட நாள் நெருங்கிய நட்புக் கொண்ட பாகிஸ்தான் இந்த யுத்த நடவடிக் கையில் பங்கேற்க சவூதியின் கோரிக்கை வரும் வரை காத்திருக்கிறது. "இது தொடர்பாக நாம் சவூதி  அரேபியாவுடன் தொடர்பு கொண்டோம் என்பதை என்னால் உறுதி செய்ய முடியும். இது தொடர்பில் தொடர்ந்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சவூதி  கூட்டணியின் இராணுவ நடவடிக்கை யெமனுக்கு எதிரான யுத்த பிரகடனம் என்று தலைநகர் சனாவில் இருந்து ஹவ்தி பேச்சாளர் முஹமது அல் புகைதி எச்சரித்தார்;. இந்த வான் தாக்குதல்களில் ஹவ்தி தலைவர் முஹமது அலி அல் ஹவ்தி காயமடைந்ததாக வெளியான செய்தியையும் அவர் மறுத்தார்.

இந்த வான் தாக்குதல் அமெரிக்க ஆதரவு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று ஈரான் அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஈரான் அரச தொலைக்காட்சி வான் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பிலான காட்சிகளை ஒளிபரப்பி இருந்தது. அதில் கொல்லப்பட்ட உடல்கள் மற்றும் காயமடைந்தோரை காண்பித்து, "யெமன் மீதான அமெரிக்க ஆதரவு ஆக்கிரமிப்பால் பல யெமன் மக்களும் கொல்லப்பட்டுள்ளனர்" என்று விபரித்தது.

யெமன் தலைநகர் சனா உட்பட பல பகுதிகளையும் கைப்பற்றி வரும் 'pயா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் நிதி மற்றும் பயிற்சிகளை வழங்கி உதவுவதாக சவூதி  தலைமையிலான கூட்டணி மற்றும் ஒரு சில மேற்கத்தேய அதிகாரிகள் குற்றம் சாட்டியபோதும் அதனை ஈரான் மற்றும் ஹவ்திக்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

தலைநகர் சனாவின் பல பகுதிகளிலும் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதை இராணுவ தரப்பு உறுதி செய்துள்ளது. இதில் டைலியா விமானத்தளம், வடக்கு சனாவில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் மற்றும் கடந்த ஜனவரியில் ஹவ்திக்கள் கைப்பற்றிய ஜனாதிபதி வளாகம் ஆகிவற்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் மூன்று ஹவ்தி தளபதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சவூதியின் nஜட் விமானங்கள் சனாவின் விமானப்படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதை ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். எனினும் இந்த யுத்த விமானங்கள் மீது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹவ்திக்கள் குறிப்பிட்டுள்ளனர். "யெமனில் மக்கள் பயத்துடன் காணப்படுவதாக" யெமன் போஸ்ட் பத்திரிகையின் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். "தலைநகர் சனாவின் குறிப்பிட்ட இடத்தில் (குண்டுகள்) விழவில்லை. அது தலைநகரின் எல்லா பகுதிகளிலும் விழுகிறது" என்றார்.

யெமனில் சண்டையிடுவோர்

ஹவ்திக்கள்: வடக்கு யெமனில் இருக்கும் சியா சிறுபான்மையினராவர். இவர்கள் தலைநகர் சனாவை கடந்த ஆண்டு கைப்பற்றினர். அது தொடக்கம் தனது ஆதிக்க பகுதியை நாட்டில் விரிவுபடுத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி ஹதி: இராணுவம் மற்றும் பொலிஸாரின் ஆதரவு ஜனாதிபதிக்கு உள்ளது. தவிர மக்கள் எதிர்ப்புக் குழு எனும் ஆயுதக் குழுவின் ஆதரவும் ஜனாதிபதிக்கு உள்ளது. தெற்கில் வலுவாக இருக்கும் ஜனாதிபதி ஹதி, ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுக்க முயன்று வருகிறார்.

அரபு தீபகற்பத்திற்கான அல் கொய்தா:

அல்கொய்தாவின் மிக அபாயகரமான கிளை என்று அமெரிக்கா கருதுகிறது. ஆகாப் என்று அழைக்கப்படும் இந்தக் கிளை ஹவ்தி கிளர்ச்சி யாளர்கள் மற்றும் ஜனாதிபதி ஆதரவுப் படை ஆகிய இரு தரப்பையும் எதிர்க்கிறது. இஸ்லாமிய தேசம்: ஐ.எஸ்ஸின் யெமன் கிளை அண்மையிலேயே தோன்றியது. ஐ.எஸ்ஸின் பிரசன்னம் ஆகாப்பை பலவீனப்படுத்தும் என்று கருதப்படுகிறது.

3 comments:

  1. இஸ்லாத்தின் பெயரால் எங்கு பார்த்தாலும் பிரச்சினை, தீவிரவாதம், பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, படுகொலைகள் என்று இருப்பதற்கு யார் பொறுப்பு?

    எமனில் குண்டுபோட முண்டியடித்துக் கொண்டு நூற்றுக் கணக்கான விமானங்களை அனுப்பும் நாடுகளின் சண்டித்தனம், இஸ்ரவேலுக்கு முன்னால் போட்டிப் பாம்பாக படுத்து விடுகின்றது.

    யோசிக்க வேண்டிய விடயம்.

    ReplyDelete
  2. Muhammed Rasheed, இன்றைக்கு நீங்கள் ஹதீஸ் என்கின்றீர்கள், யாரையோ ஹவாரிஜ் என்கின்றீர்கள், நாளை இன்னொருவர் வந்து அந்த ஹதீஸ் லஈப் என்பார். எதை வைத்து எதனை தீர்மானிப்பது?

    ReplyDelete
  3. யெமனில் வாழ்கின்ற பத்து சதவிகிதத்தையும் தாண்டாத ஹவ்தியீன்களுக்கு ஈரான் முழுமையான நிதி, ஆயுத ரீதியான உதவிகளைச் செய்ததனாலேயே யெமனின் அரசாங்கத்தை வீழ்த்துமளவுக்கு ஹவ்தியீன்கள் பலம் பெற்றார்கள் என்பது உண்மை. இவ்வளவு நாளாக இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எதிர்பதாக வெளியில் படம் காட்டிக்கொண்டிருந்த ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் ஸிரியாவில் முஸ்லிம்களை கொலை செய்வதற்கும் யெமன், ஈராக்கில் முஸ்லிம்களை கொலை செய்வதற்கும் எல்லா வகையான உதவிகளையும் செய்வதன் மர்மமென்ன?. மத்தியகிழக்குப் பகுதியிலே ஈரானுக்கு மிகப்பெரும் எரிச்சலாக இருக்கின்ற ஸவூதியை வீழ்த்துவது ஈரானின் இலக்கு. ஸவூதியை அண்டியுள்ள நாடுகளை முழுமையாக ஆக்கிரமிப்பதன் மூலம் இதை சாத்தியப்படுத்துவதற்கு ஈரான் முயற்சிக்கிறது. இதனாலேயே, இங்கு சுட்டிக்காட்டப்பட்ட நாடுகளுக் கு ஈரான் தனது முழு உதவியையும் செய்கிறது. யெமனை கைப்பற்றியபோது இதை தெளிவாக ஈரானும் ஹவ்தி தலைவர்களும் சொன்னார்கள். அதனால், யெமனில் ஆட்ச்சி மாற்றத்தை உருவாக்க ஸவூதி முயற்சிக்கிறது.

    ReplyDelete

Powered by Blogger.