Header Ads



இலங்கையிலிருந்து ஹஜ் - புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த திட்டம்

(JM.Hafeez)

ஹஜ் விவகாரத்தை இலகுவானதாகவும் சகலரும் திருப்தி அடையும் விதத்திலும் அமையக் கூடியதாக, விசேட உபகுழு ஒன்றை நியமித்துள்ளதுடன், வெகு விரைவில் 'பெக்கேச்' முறை ஒன்றை அமைத்து அதற்கான கேள்வி மனுக்கோரல் முறை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

(30.3.2015) கட்டுகாஸ்தோட்டை மகாவலி ரெஸ்ட்ரூரண்ட் ல் இடம் பெற்ற செய்தியாளர்கள் மகாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பிரதான ஐந்து கடமைகளில் ஒன்றாக ஹஜ் உள்ளது. அதே நேரம் தகுதியான சகல முஸ்லீம்களுக்கும் ஹஜ் செய்ய அனுமதி கேட்க உரிமை உண்டு. மறு புறமாக வருடத்தில் ஆறு மாதகாலங்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சு ஹஜ் விவகாரங்களைக் கையாள வேண்டி உள்ளது. அதே நேரம் சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள நிர்மாணப்பணிகள் காரணமாக ஹஜ்யாத்திரீகர்களை கட்டுப் படுத்த கோட்டா (ஒதுக்கீடு) முறை ஒன்றையும் அமுல் படுத்துகிறது. இதனால் வருடா வருடம் ஹஜ் செய்வதற்கான ஒரு போட்டி நிலை ஏற்பட்டு முகவர்கள் கூடுதல் கட்டணம் அறவிடும் நிலையும் ஏற்பட்டு வருதை அறிய முடிகிறது.

எனவே இது போன்ற பல பிரச்சினைகளைச் சீராக்கும் வகையில் ஹஜ் செய்ய முயற்சிப்பவர்களை மூன்று பிரிவுகளில் பிரித்து அவற்றிற்கான கட்ணங்களை வரையறை செய்ய உள்ளோம். ஆகக் குறைந்த கட்டணத்திற்கு சதாரண வசதிகளே இருக்கும். மற்றது நடுத்தரக்கட்டணத்தில் நடுத்தர வசதிகளுடனான பிரயான ஒழுங்குகள் இருக்கும். இன்னொருவகையான சுப்பர் பெக்கேஜ் இருக்கும். சிலருக்ககு பணம் பற்றிய பிரச்சினை இருக்காது. அப்படியானவர்கள் மிகக் கூடிய சொகுசு முறையை விரும்புவர். இது சாதாரண மக்களைப் பாதிக்காத வகையில் தனித்தனி பெக்கேச் முறை அமுல் படுத்தப்பட்டு அவற்றிற்கு விலை மனுக்கோறல் (டெண்டர்) முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ஆனால் ஹஜ் அனுமதிக் கோட்டாவை அதிகரிப்தன் மூலம் இவை அனைத்து பிரச்சினைகளும் தீர்கப்பட இடமுண்டு. இது தொடர்பாக நான் சவூதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்கா அமைச்சரை தொலைபேசி ஊடகத் தொடர்பு கொண்டபோது சாதகமான பதில் கிடைத்தது. இது தொடர்பாக எமது அதிகாரிகளுடன் அங்கு சென்று நேரடியாகக் கதைக்க நான் எடுத்த முயற்சிகள் அங்குள்ள அரசியல் கொந்தளிப்பு காரணமாகத் தாமதமாகி வருகிறது. எனவே வெகு விரைவில் அங்கு சென்று நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

முஸ்லிம்களது ஹஜ் விவகாரத்தை இலகு படுத்தும் நோக்கிலேதான் முஸ்லிம் சமய விவகார அமைச்சு தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பொறுப்பு தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதகவும் அதனை சரியாக நிறைவேற்றாத பட்சத்தில் நான் இவ்வுலகில் பொதுமக்களுக்கும் மறுமையில் இறைவனுக்கும் பதில் கூற வேண்டியவனாகி விடுவேன். எனவே இயன்றவரை நான் அதனைச் சரியானச் செய்ய முயற்சிக்கின்றேன் என்றார்.

கடந்த காலங்களில் சுமார் 2400 பேர்வரைக்குமான ஹஜ் அனுமதியே கிடைத்தது. அதற்கு முற்பட்ட ஒரு காலத்தில் 6000 வரை கிடைத்தது. எனவே குறைந்த பட்சம் இலங்கையிலிருந்து செல்லும் ஹஜ்ஜாஜிகளின் எண்ணிக்கை 5000 அளவில் உயர்த்தப் படுமாயின் கட்டணங்களில் வீழ்ச்சியும் முகவர்களின் மோசடியும் குறையும் என்றார்.

வெகு விரைவில் தொகையை உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன் ஹாஜிகளும் முகவரும் உற்பட அணைத்து தரப்பும் திருப்தி அடையும் விதத்தில் ஒரு திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.