Header Ads



தாயின் பாடலைக் கேட்டு, கை தட்டிய கருவறை குழந்தை (வீடியோ இணைப்பு)

தாயின் பாடலைக் கேட்டு கருவறையில் இருக்கும் குழந்தை கை தட்டிய வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண்,  குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார். அப்போது அப்பாடலை கேட்டு அவர் கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகள் கண்ட மருத்துவர்கள்  அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் படம்பிடித்தனர்.இந்த காட்சிகளை ஜென் கார்டியனல்லின் கணவர் வீடியோவாகவும் பதிவு செய்தார்.

இது குறித்து தாய் ஜென் கார்டியனல் கூறுகையில், எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது ஆச்சரியமான நிகழ்வு. இந்த நிகழ்வை என்னால் மறக்க முடியாதது என கூறினார். குழந்தை கை தட்டும் 15 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவை யூ டியூபில் ஒரே நாளில் மட்டும் 48000 பேர் பார்த்துரசித்துள்ளனர்.  

No comments

Powered by Blogger.