Header Ads



மஹிந்த தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது - அமெரிக்கா

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை தெற்காசியாவின் ஆச்சரியமாகவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி, குடும்ப ஆட்சி, அச்சுறுத்தி பிளவுபடுத்தும் கொள்கை, உறுதியற்ற நிலையில் சிக்கி தவித்த இலங்கையில் இடம்பெற்ற தேர்தலின் போது நம்பிக்கையளிக்கும் வகையில் மக்கள் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மற்றும் சிறுபான்மையின அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய தேசிய அரசாங்கத்தை ஆரம்பித்துள்ளமை பாராட்டத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னாள் அரசாங்கத்தில் காணப்பட்ட அச்சுறுத்தும் கொள்கைகளில் இருந்து தனது நாட்டை வெளிக்கொண்டு வருவார் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மகிந்த அரசாங்கத்திலிருந்ததை விடவும் தற்போதைய அரசாங்கத்தில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல், சமத்துவமான பொருளாதார வளர்ச்சி, இனப்பிரச்சினையை குறைத்தல், ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவரது கூட்டணியும் வெகு விரைவில் அபிவிருத்தி உதவி, சிவில் சமூகம் மற்றும் பாதிக்கப்படகூடிய சமூகங்களுக்கு ஆதரவு வழங்குதல் உள்ளிட்ட விரிவான ஆட்சி சீர்திருத்த திட்டத்தில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு பொறுப்புகூறும் உள்ளக பொறிமுறையை உருவாக்கவும், வடக்கு, தெற்குக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அரசாங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் என நிஷா பிஸ்வால் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.