Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் மீது கோடாரியினால் தாக்குதல் - தாக்கியவர் பொலிஸில் சரண்


இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரும் வெலி ராஜூ( மணல் ராஜூ) என்று அழைக்கப்படுபவருமான பிரியந்த சிறிசேன தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை பொலநறுவையில் இடம்பெற்றுள்ளது.

கோடரி ஒன்றினால் இவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பொலநறுவையில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் ஏற்கனவே ராஜூ மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ஜனாதிபதியும் இந்த விடயத்தில் தமது சகோதரரை எச்சரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி சகோதரர் ‘வெலி ராஜூ’ என்று அழைக்கப்படும் பிரியந்த சிறிசேனவை தாக்கியவர் அவருடைய நண்பரான லக்மால் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் கோடரியால் தாக்கப்பட்ட பிரியந்த சிறிசேன தற்போது மேலதிக சிகிச்சைக்காக தாக்குதல் சம்பவத்தில் கயாமடைந்த ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர் வெலி ராஜூ என்ற பிரியந்தவை தாக்கியதாக கூறப்படும் லக்மால் என்பவர் சற்று முன்னர் பொலநறுவை பக்கமுன என்ற இடத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்தநிலையில் அவர் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1 comment:

  1. இதுவே முன்னைய ஜனாதிபதியின் சகோதரர் தாக்கப்பட்ட விடயமாக இருந்தால், லக்மால் மறைத்து வைத்திருந்த கோடாரியை காட்டுவதாக போலீசாரை அழைத்துச் சென்று, போலசார் மீது எறிகுண்டு தாக்குதல் நடத்த முற்பட்ட பொழுது வெடிகுண்டு தவறுதலாக வெடித்து கொல்லப்பட்டு இருப்பார். தற்பொழுது என்ன நடக்கின்றது என்பதை பொறுத்துப் பார்ப்போம்.

    ReplyDelete

Powered by Blogger.