Header Ads



மஹிந்த ராஜபக்ஸவின் சகா, காமினி செனரத்தின் ஆச்சரியமூட்டும் சொத்துக்கள் (பட்டியல் இணைப்பு)


-M.J.M. Sharthaar-

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், ஜனாதிபதி செயலணியின் பிரதானியாக செயல்பட்ட காமினி செனரத் அவர்களது சொத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 

இவர் மஹிந்த அரசாங்கத்தில் குறைந்த கல்வித்தகைமைகளுடன் பல பொருத்தமில்லாத பொறுப்புகளுக்கு  நியமிக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டு இருந்த போதும், முன்னால் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குரியவர் என்பதால் அவை கண்டுகொள்ளப்படாமல் இருந்ததுடன், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என்ற அடிப்படையில் தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இவர் ஜனாதிபதி ராஜபக்ஷவின் பிணாமி என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

இதனை ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த மேல் மாகாண சபை உறுப்பினர் சிறி வர்ணசிங்க அம்பலப்படுத்தியுள்ளார். அவரது பட்டியலிடப்பட்டுள்ள சொத்து விபரங்கள் வருமாறு.

அவரது மாமியார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள இல 47/2 கிரகரி வீதி கொழும்பு - 7 இல் அமைந்துள்ள 100 கோடி அளவு பெறுமதியான இரண்டுமாடி வீடும் மற்றும் அதற்கு பக்கத்தில் உள்ள 30 கோடி பெறுமதியான வீடு,

மருதானை போலிஸுக்கு அண்மையில் நிர்மானிக்கப்பட்டுள்ள ரூ 70 கோடியளவு பெறுமதியுள்ள கட்டடம்.

அதுருகிரிய பிரதேசத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ 200 கோடி பெறுமதியான உபகரணங்களுடன் ரூ 500 கோடி பெறுமதியுள்ள போமேட் தொழிற்சாலை,

பன்னிபிடிய வீதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள ரூ 5 கோடி பெறுமதியான வீடும் வளவும்,

பாதுக்க மீகொடை பிரதேசத்தில் ரூ 20 கோடியளவு பெறுமதியான 10 ஏக்கர் நிலம்

பொல்கொடை பிரதேசத்திலும் காணி ஒன்று உள்ளது,

ரூ 100 கோடியளவு பெறுமதியுள்ள ஹக்மனை பிரதேசத்தில் உள்ள காணி,

ஹம்பாந்தொட்டை, பதகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள ரூ 20 கோடி பெறுமதியுள்ள 50 ஏக்கர் நிலம்,

அனுராத புரத்தில் 15 ஏக்கர் காணி,

பொரல்லை மாதா வீதியில் 70 இலட்சம் பெறுமதியான வீடொன்று,

நுவர எலியாவில் கிரெகரி ஏரிக்கருகாமையில்  ரூ. 60 கோடி பெறுமதியான வீடும் காணியும். 

No comments

Powered by Blogger.