Header Ads



கண்டியில் மஹிந்தவுக்கு ஆதரவாக பேரணிக்கு ஏற்பாடு - ஆசாத் சாலி மீண்டும் சவால்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்காக 5000 பேர் நுகேகொட பேரணிக்கு அழைத்து வந்து காட்டினால் தான் அரசியலைவிட்டு விலகுவதாக,  தேசிய ஒற்றுமை முன்னணியின் தலைவர் அசாத் சாலி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதே சவால் எதிர்வரும் 6ஆம் திகதி கண்டியில் இடம் பெறவுள்ள பேரணிக்கும் செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நுகேகொட பேரணிக்கு வந்தவர்களில் 12000 பேர் மாத்திரமே சொல்வதை கேட்கக்கூடியவர்கள். மற்றைய அனைவரும் குடிகாரர்கள் என அவர் கூறியுள்ளார்.

எப்படியிருப்பினும் கண்டி பேரணிக்கு தேசியவாதமுடைய சிங்க இலட்சனையுடைய கொடி மற்றும் பௌத்த கொடிகளுடன் யாரேனும் கலந்து கொண்டால் தான் முன்வைத்த சவால் செல்லுபடியாகாதென அசாத் சாலி சுட்டிக்காட்டியுள்ளார்.

11 comments:

  1. This man is becoming a laughing stock of our community.We need politicians who are inteligent not thugs. He may have good intentions in his mind but he needs some inteligence to do good politics. Is this foolish challenge from him going to help our community or contry in any way? His challange is more likely to help Wimal Weerawansa and his cronies; no one else.

    ReplyDelete
  2. (இதனை ஜப்னா முஸ்லிம் பிரசுரிக்குமா?)

    இவர் எதோ ஒரு உள்நோக்கத்துடன் செயல்படுகின்றார் என்று சந்தேகமாக உள்ளது. பெளத்த சிங்கள இனவாதிகளுக்கு புத்துயிர் அளித்து, அவர்கள் பாரிய அளவில் எழுச்சி பெற்று வருவதற்கு தேவையான ஊக்கத்தை இவர் வழங்கி வருவது கண்கூடாக தெரிகின்றது.

    சாதாரணமாக நடைபெற்று இருக்க வேண்டிய நுகேகொடை கூட்டத்தை, வெற்றிகரமான கூட்டமாக மாற்றியதில் முக்கிய பங்கு அசாத் சாலியின் வாய்க்கே உரியது.

    முஸ்லிம்கள் அசாத் சாலி விடயத்தில் எச்சரிக்கையாக இருப்பதே நல்லது.

    ReplyDelete
  3. He came out and stood for the community at a time it was very crucial but he does not seem to be having a clear direction and policy to deal on the different issues.

    ReplyDelete
  4. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.

    ஆசாத் சாலி அவர்களே, இப்படியான சிறு பிள்ளைத்தனமான, பக்குவமற்ற, ஒன்றுக்கும் பிரயோசன மற்ற சவால்களை இட்டு உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அதே நேரத்தில் பெரும் பான்மை மக்கள் மத்தியில் பிழையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  5. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுகிறது.

    ஆசாத் சாலி அவர்களே, இப்படியான சிறு பிள்ளைத்தனமான, பக்குவமற்ற, ஒன்றுக்கும் பிரயோசன மற்ற சவால்களை இட்டு உங்களையே நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். அதே நேரத்தில் பெரும் பான்மை மக்கள் மத்தியில் பிழையான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  6. Asath has to be examined for mental disorders.

    ReplyDelete
  7. Please be mindful of your unsolicited and unwanted bet.Have you any right to take abet on your Provincial Council seat without the sanction of your voters in Kandy?Don't spoil your political career by such behavior which would only encourage your enemies .we would like you to be more diplomatic and tactful while being courageous and honest.to have a lengthy political life to serve the community.

    ReplyDelete
  8. ரியாக்ஷன், லிட்டில் ஸ்டார், சக்பீஸ், லன்கா கூல், குருவி உட்பட சகலருக்கும்..

    இப்படி தைரியமாக பேசுபவர்களையெல்லாம் நாமே மட்டம் தட்டுவதால்தான் பெரும்பாலும் நமது சமூகத்திலிருந்து துணிச்சல் இல்லாத கோழைகளே தலைவர்களாக இருக்கின்றார்கள்.

    எல்லோருமே கண்டிக்காமலும் அவர்கள் செய்யும் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு பேசாமலும் இருப்பதால்தான் கணிசமான சிங்கள மக்களுக்கு தாங்கள் இனவாத சக்திகளால் பிழையாக வழிநடாத்தப்படுவது தெரியாமலே போகின்றது.

    சில விடயங்களை நையாண்டியாகக் கூறினால்தான் மரமண்டைகளுக்கு உறைக்கும்

    முடிந்தால், தைரியமாகப் பேசுபவனுக்கு தோள் கொடுங்கள் இல்லையென்றால் சகலதையும் பொத்திக்கொண்டு ஓய்வெடுங்கள்.

    ஓவர் நாகரீகம் பேசிப்பேசி உதவாக்கரையா(க்)காதீர்கள்!

    ReplyDelete
  9. முஸ்லிம்களின் ஒரே ஒரு தலைவர் இவர் மட்டும் தான்

    ReplyDelete

Powered by Blogger.