Header Ads



தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க, சுதந்திரக் கட்சியின் 50 எம்.பி.க்கள் கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை நியமிக்குமாறு கோரி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 50 பேர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த 50 பேரிடமும் கையெழுத்து பெறப்பட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் வாசுதேவ நாணயக்கார, இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்தனவை நியமிப்பதற்கான கையெழுத்துக்கள் உறுப்பினர்களிடமிருந்து புதன்கிழமை பெறப்பட்டதென அவர் தெரிவித்தார்.

புதிய தலைவர், ஐ.தே.கவுக்கும் ஸ்ரீ.சு.கட்சிக்கும் எதிரான நடக்க கூடியவராகவும் தாம் சார்பாக பேசக்கூடியவராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தினேஷ் குணவர்தனவை, எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த விவகாரம் தொடர்பில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, செவ்வாய்க்கிழமை குறிப்பிடுகையில், இவ்விடயம் குறித்து தற்போது தெளிவான தீர்மானத்தை எடுக்கமுடியாது எனவும் கூடிய விரைவில் தனது தீர்மானத்தை அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

No comments

Powered by Blogger.