Header Ads



பாராளுமன்ற தேர்தலில் 10 மாவட்டங்களில் போட்டியிடுவோம் - அப்துர் ரஹ்மான்

எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) பத்து மாவட்டங்களில் போட்டியிடவுள்ளதாக அதன் தவிசாளர் பொறியியலாளர் MM.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் பாரளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, கொழும்பு, கம்பஹா, கண்டி, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் வன்னி ஆகிய பத்து மாவட்டங்களிலும் தமது வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் குறிப்பிட்டார்.

நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் தரமான மக்கள் பிரதிநிதிகளே நாட்டிற்கும் மக்களுக்கும் தேவைப்படுகின்றனர். நல்லாட்சி என்பது இனம், சமயம் எனபவற்றிற்கு அப்பால் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டதாகும்.

எனவேதான் நாட்டில் நல்லாட்சியை உறுதிப்படுத்த வேண்டுமானால் நீதியின் அடிப்படையில் செயற்படக்கூடிய மக்கள் பிரதிநிதிகளே அடுத்த பாராளுமன்றத்திற்கு மக்களால் தெரிவு செய்யப்படல் வேண்டும். அவ்வாறானவர்கள் தெரிவு செய்யப்படும் போதுதான் இலங்கை ஐக்கிய மக்கள் சமாதானம் சக வாழ்வுமிக்க அபிவிருத்தியை நோக்கிய நல்லாட்சிமிக்க நாடாக முடியும்.

இந்த இலக்கோடுதான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலினை எதிர்கொள்ளவுள்ளது எனவும் மேற்படி மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

1 comment:

  1. நல்ல ஒரு தீர்மானம், இதுவரை ஊழல், நம்பிக்கைத் துரோகம், மோசடி, அடாவடி என்று பல்வேறு முகங்களைக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திட்கு அனுப்பி, வெறுப்புற்று இருக்கும் மக்களுக்கு, இவர்களின் வரவு ஒரு மாற்றாக அமையும்.

    இவர்கள், நல்ல திறமையான, நேர்மையான, கல்வியறிவுள்ள வேட்பாளர்களை தெரிவு செய்து நிறுத்தினால், ரிஷாட், ஹக்கீம், ஹிஸ்புல்லாஹ் போன்றவர்களின் ஆட்டத்தை அடக்கி, முஸ்லிம்களுக்கு சிறந்த மாற்றுத் தலைமையை ஏற்படுத்தலாம்.

    இவர்களின் முதல் முயற்சி நல்ல ஒன்று, அதன் வெளிப்பாடே வடமாகாண உறுப்பினர் அய்யூப் அஸ்மி அவர்கள். இவர் பேராதனை பல்கலைக் கழக பட்டதாரியும், நளீமியா பட்டதாரியும் ஆவார்.

    ReplyDelete

Powered by Blogger.