Header Ads



அம்பாறையில் சுதந்திர தின நிகழ்வுகள்

-பி. முஹாஜிரீன்-

இலங்கையின் 67வது சதந்திர தினத்தை முன்னிட்டு அரச, மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் பிரதான நிகழ்வுகள் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று (04) காலை இடம்பெற்றன.

இது தொடர்பான பிரதான வைபவம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நீல் த அல்விஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் மேலதிக அரச அதிபர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அரச, தனியார் நிறுவனங்களில் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கார மின் விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்டிருந்ததோடு ஆலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் விசேட மத வழிபாடுகளும் சமய ஆராதனைகளும் இடம்பெற்றன.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதடன், இங்கு விசேட இரத்த தான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

அகில இலங்கை முஸ்லிம் லிக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனம் ஏற்பாடு செய்த சுதந்திரதின உரையும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் முன்னணிகளின் மாவட்டத் தலைவரும் ஓய்வு பெற்ற அதிபருமான ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் நற்பிட்டிமுனை அல் அக்சா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

பாலமுனை அல் ஈமாணிய்யா அரபக்கல்லூரி அதிபர் ஆசிரியாகள் மற்றும் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த துஆப் பிராத்தனையுடனான சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரியின் அதிபர் அல்ஹாபிழ் மௌலவி சாஜித் ஹூஸையின் தலைமையில் பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலிலும், சின்னப்பாலமுனை சுப்பர் ஓக்கிட் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலய வளாகத்திலும், பாலமுனை அல்அறபா விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு பாலமுனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் றஉப் பள்ளிவாசல் வளாகத்திலும,; பாலமுனை இஜாஸ் பவுண்டேசன் அமைப்பு ஊரிலுள்ள கழகங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய சினேகபூர்வ கடின மற்றும் மென்பந்து கிரிக்கெட்சுற்றுப் போட்டி பாலமுனை பொது விளையாட்டு மைதானத்திலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் அரசியல் பிரமுகர்கள், மதத்தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூகசேவை அமைப்புக்களின் தலைவர்கள் பொலிசார், படை அதிகாரிகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.