Header Ads



ஒலுவில் அழிகிறது

(siyan s samsudeen)

ஒலுவில் பிரதேசத்துக்கு எவராவது அபிவிருத்தி செய்ய விரும்பினால் அப் பிரதேசத்தில் நிலவுகின்ற கடல் அரிப்பினை தடுப்பதற்க்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று ஒலுவிலோடு தொடர்புடைய அரசியல் வாதிகள் மற்றும் சமூக சேவை நோக்கம் கொண்டவர்களை வேண்டி கொள்கிறேன்.

ஒலுவில் துறைமுகம் ஒன்று அமைக்கபட்ட நாளில் இருந்து அத்துறைமுகத்தின் மூலம் ஒலுவில் மக்களால் ஒரு அனுவளவு நன்மை கூட பெற்று கொள்ளாமல் அதற்க்கு பகரமாக  அதிகமான  துன்பங்களை வயிற்றி கட்டிக்கொண்டு சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஒலுவில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒலுவில் கிராமத்தை பொறுத்த வரயில் கடற்தொழில், வயல் வெளிகளையும் நம்பி காலங்களை நகர்த்தி கொண்டு வாழ்க்கை சக்கரத்தை ஒட்டி கொண்டு இருக்கும் மக்கள் வாழ்கின்ற ஒரு பிரதேசம் வேறு வழிகளில் இருந்து வருகின்ற வருவாயை விட மீன்பிடி மற்றும் நெற்செய்கையில் இருந்து  இருந்து வருகின்ற வருமானத்தை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர்.கிழக்கே கடலினையும், மேற்கே வயலினயும், வடக்கே ஆறு மூலம் சூழ பட்டு இயற்கயின் மூலம் அலங்கரிக்க பட்ட ஒரு அழகிய பிரதேசமும் கூட.

ஆனால் ஓலுவிலில் பெயருக்காக ஒரு துறைமுகம் அமைக்க பட்டதான் பின்னர்  துறைமுகத்தை வைத்து சூனியம் செய்தது போன்று கடலயும் கடலோரத்தினையும் நம்பி வாழ்க்கை நடத்துகின்ற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் ஒலுவில் பிரதேசத்தின் சிலபகுதிகளை கடல் தாய்  எல்லை பிடித்து ஆக்கிரமித்து கொண்டு இருக்கிறது

மாரி காலங்களில் அதிகமான கஷ்டங்களுக்கு முகம் கொடுக்கும் மீனவர்களின் நிலைகளை மாரி காலம் முடிந்ததும் ஊரை பவனி வரும் அரசியல் வாதிகள் கணக்கெடுப்பதில்லை அந்த மீனவர்கள்தான் அவர்களுக்கு வாக்களித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட்டார்கள் போல .

மாரி காலம் வந்தால் கடலோடு சேர்த்து ஆறும் ஆற்றோடு சேர்த்து வயலும் ஒன்றாகி விடும் ஓலுவிலில் காணப்படும் வெளிச்ச வீடு கடலின் மத்தியில் தத்தளிக்கும் கடலுக்கும் ஆற்றுக்கும் இடை நடுவில் கரை ஒதுக்கி வைக்க பட்டு இருக்கும் மீனவர்களின் வள்ளங்கள் இப்பொழுது பயணம் செய்யும் பாதயில் போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கடலின் மூலம் இழுத்து செல்லப்பட்டு விட்டன மீனவர்களின் வாடி வீடுகள் , தோணிக்கல் போன்ற பல்வேறு பொருட்களை இழந்து தவிக்கும் ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வு எப்போது கிடைப்பது 

இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடலின் அரிப்பினை தடுப்பதற்க்காக கடலுக்குள் அணை கட்டினார்கள் அணை கட்டிய ஆறு மாதத்தில் அணைக்கு மேலால் கடல் மட்டம் உயர்ந்து இருந்தது சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்னர் அணையயும் தாண்டி கடல் ஆற்ரோடு இணைந்து ஊரின் ஒரு பகுதியை வேறாக பிரித்தது எல்லோரும் அறிந்த  விடயமாகும் .

இவ்வாறே எவரும் இந்த கொடிய நிகழ்வை கணக்கெடுக்காமல் போனால்காலப்போக்கில் ஊர் இருந்த அடயாளமே தெரியாமல் போய் விடும்.

எனவே மதிப்புக்குரிய அமைச்சர்கள் மற்றும் சமூக சேவயாளர்களிடம் நாம் வேண்டி நிற்பது ஒலுவில் பிரதேசத்தின் இந்த கடலரிப்பு பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் தீர்வு ஒன்றினை பெற்று தர வேண்டும்.

நீங்கள் ஒலுவில் மக்களுக்கு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று விரும்பினால் இந்த பிரச்சினைக்கு சிறந்த ஒரு நடவடிக்கையினை மேற் கொள்ளுமாறு வேண்டி கொள்கிறேன்.  அதிலும் குறிப்பாக நீர் வளங்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்ரோடு இந்த விடயம் சம்மந்த பட்டு உள்ளதால் தயவு செய்து சிறந்த ஒரு தீர்வினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பெற்று தருவார் என்று நம்புகிறேன்.


No comments

Powered by Blogger.