Header Ads



"இரண்டு நிமிடங்கள்" ஒதுக்கி இதை படியுங்கள்!

ஒவ்வொரு மனிதனின் மரணமும் எமது கபர் வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் ஞாபகபடுத்துகின்றன!

ஒரு மனிதனை தூய்மையாக படைத்து அவனுக்கு தேவையான வசதிகளையும் கொடுத்து, உலகத்தில் வாழும் போது தூய்மையான முறையில் வாழ்ந்து, நன்மையை ஏவி தீமையை தடுத்து, அனைத்து மக்களையும் அந்த ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்க சொன்னானே ! அந்த அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்ட என் அன்புள்ளங்களே !மரணம் எமக்கு தரும் படிப்பினை எம்முடன் வாழ்ந்து கொண்டிருந்த மக்களெல்லாம் எம்மை விட்டு பிரிந்து செல்கின்றார்கள் அல்லாஹ்வுடைய அழைப்பு அவர்களுக்கு எல்லாம் வந்துவிட்டது.

எங்கே சென்றுவிட்டார்கள்? நாம் நினைத்துக்கொண்டோம் மரணித்து விட்டார்கள் நாம் அடக்கிவிட்டு வந்துவிட்டோம் எமது கடமைகள் நிறைவடைந்துவிட்டன என்று. ஆம் அவர்களுக்கு கப்ர் வாழ்க்கை தொடங்கிவிட்டன. இவ்வுலகில் வாழும் போது அல்லாஹ்க்காகவும் அவனது மார்க்கத்திற்க்காகவும் என்ன நன்மைகளை செய்தார்களோ அதன் பிரதிபலிப்பு மண்ணறை வாழ்க்கையிலே தொடங்குகிறது முடிவு கியாம நாள் வரை. அவர்கள் சென்று விட்டார்கள்.

நாம் இன்ஷா அல்லாஹ் செல்ல இருக்கிறோம். மண்ணறை வாழ்க்கைக்காக எம்மிடத்திலே என்ன இருக்கிறது?

ஒவ்வொருவரும் சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளோம்.

எம்மை நாமே பரிசோதிப்போமே? ஐங்காலத் தொழுகை கண்டிப்பாக தொழுதாக வேண்டும் தொழுதால் அவன் அல்லாஹ்வை ஈமான் கொண்டதின் அடையாளம்.

ஒவ்வொரு மனிதனும்  எமது உள்ளத்தில் சில கேள்விகளை தொடுப்போம்?

ஃபஜ்ர் தொழுகையை பள்ளியில் போய் ஜமாஅத்தோடு தொழுதால் அன்றைய பொழுது அல்லாஹ்வுடைய பொருப்பிலே வருகிறோம். தினமும் தொழுகிறோமா? ஐங்காலத் தொழுகையை ஜமாத்தோடு தொழுதால் 27 நன்மைகள். தினமும் ஐமாத்தோடு தொழுகிறோமா?

குர்ஆனிலே ஓரு எழுத்தை ஓதினால் 10 நன்மை. தினமும் எத்தனை சூராக்களை ஓதுகிறோம்? தினமும் 12 ரக்அத் சுன்னத் தொழுதால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு வீட்டை கட்டுகிறான். தினமும் தவறாமல் தொழுகிறோமா? ஓரு சுப்ஹானல்லாஹ் சொன்னால் அல்லாஹ் சுவனத்தில் ஓரு மரத்தை நடுகிறான்.

ஓரு நாளைக்கு எத்தனை சுப்ஹானல்லாஹ் சொல்கிறோம்? ஓரு தடவை அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு என்று சொன்னால் 30 நன்மை.

ஓரு நாளைக்கு எத்தனை நபர்களுக்கு ஸலாம் சொல்கிறோம்.

ஓரு நோயாளியை காலையில் போய் சந்தித்தால் மாலை வரை 70,000 மலக்குமார்கள் எமக்காக துஆச் செய்கிறார்கள். ஓரு நாளைக்கு எத்தனை நோயாளியை நாம் சந்திக்கிறோம்?

தொழுகையை எதிர் பார்த்தநாம் பள்ளியில் அமர்ந்து இருக்கும் போது எமது பாவங்கள் மரக்கிளைகளின் இலைகள் உதிர்வது போல் பாவங்கள் எம்மைவிட்டு உதிர்கின்றன. எத்தனை முறை நாம் தொழுகைக்காக பள்ளியில் காத்து இருந்திருப்போம்? நன்மையை ஏவி தீமையை தடுத்தால் அல்லாஹ்விடத்திலே அதிகமான நன்மைகள் உள்ளன.

எத்தனை பேருக்கு நன்மை ஏவி இருப்போம் தீமையை தடுத்திருப்போம்? ஓவ்வொரு நாளும் கோடிக்கனக்கான நன்மைகளை பெற அல்லாஹ் எமக்கு அவகாசம் தந்துள்ளான். ஓவ்வொரு நாட்களும் எம்மை விட்டு பிரிந்தால் எமது மண்ணறை எம்மை நோக்கி வருகிறது.

என்ன இருக்கிறது அந்த மண்ணறை வாழ்க்கைக்கு எம்மிடத்தில் சிந்தித்துப்
பார்ப்போமா? எத்தனை ஜனாஸாக்கள் எம்மை கடந்து செல்கின்றன. அது எம்மை கடக்கும் போது அந்த ஜனாஸாவாக நாம் இருந்தால் அந்த மண்ணறைக்கு எம்மிடத்தில் என்ன உள்ளது நாம் சிந்தித்து பார்த்தோமா?

நாம் மரணித்தபின் மண்ணறை வாழ்க்கை உண்டு நரக வாழ்க்கை உண்டு சொர்க்க வாழ்க்கை உண்டு எல்லாம் நன்றாக அறிந்து வைத்துள்ளோம். அதற்குண்டான முயற்ச்சி மட்டும் எம்மிடத்தில் இல்லை ஏன்? சினிமா மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை. ஆனால் பார்க்கிறோம் நரகத்தின் வேதனையை தேடியா? சினிமா பாட்டுக்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை. ஆனால் கேட்கிறோம். நரகத்தின் வேதனையை தேடியா? சீரீயல்கள் மண்ணறை வாழ்க்கைக்கு பயனளிக்க போவதில்லை.

ஆனால் குடும்பத்தோடு பார்க்கிறோம்.ஏன் குடும்பமே நரக வேதனையை உணரவா? ஆயிரம் ஜனாஸாக்கள் கண்முன்னே கடந்து சென்றாலும் எமது வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் வரவில்லை என்றால். எமது மண்ணறைக்கு யார் பதில் சொல்ல முடியும்?

அல்லாஹ்வுடைய தூதர் ஹபீப் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள் கப்ரிலியே நடக்ககூடிய வேதனையை மட்டும் நான் உங்களுக்கு எடுத்துச் சொன்னால் உங்களில் யாரும் எந்த ஜனாஸாவையும் அடக்க கப்ருஸ்தான் பக்கமே வரமாட்டீர்கள் என்று.

ஓவ்வொரு வினாடியும் நம்மை விட்டு பிரிந்து சென்றால் திரும்ப வரப்போவதில்லை. இன்னும் எத்தனை நிமிடங்கள் அல்லாஹ் எம்மை இந்த உலகத்தில் வைத்திருப்பான் என்பதற்க்கும் எந்தவித உத்தரவாதமும் இல்லை.

தினமும் உறங்கும் போது 10 நிமிடங்கள் எமது கப்ரை நாம் சிந்தித்துப் பார்த்தால் ஓரு நொடிப் பொழுதைக்கூட எம்மால் பாழாக்க முடியது. ஆனால் நாம் கப்ரை சிந்தித்து பார்ப்பதில்லை காரணம் உயிரோடு படுத்து இருப்பது கட்டில் மெத்தையில்

நிரந்தரமாக படுக்க போகும் இடத்தை தினமும் எண்ணிப்பார்த்தால், எமது ஈமானும் தக்வாவும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாட்ஸ்அப்பிலும், ஃபேஸ் புக்கிலும் அமர்ந்து கொண்டு 24 மணி நேரமும் உலக காரியங்களையும்  மக்கள் குறைகளையும் ஆராய்ச்சி செய்யக்கூடிய நாம்.

ஓரு வினாடி அடுத்து நாம் சந்திக்கப்போகும் எமது மண்ணறையை ஆராய்ச்சி செய்தால் தெளிவான விடையும் கிடைக்கும் அதற்கான நன்மைகளையும் விரைந்து செயல்படுத்தலாம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நாம் வேண்டுமென்றால் மண்ணறையை மறந்து வாழலாம் அது ஓரு நாள் எம்மை நினைக்கத்தான் போகிறது.

நாம் வேண்டுமென்றால் மண்ணறை வாழ்க்கையை விரும்பாமல் இருக்கலாம் ஆனால் அது ஓரு நாள் எம்மை விரும்பத்தான் போகிறது. ஒவ்வொரு ஜனாஸாவும் எம்மை கடந்து செல்லும் போது எமக்கு அல்லாஹ்வுடைய அச்சம் அதிகரிக்க வேண்டும்.

கப்ர் வாழ்க்கை கண்ணில் தோன்ற வேண்டும். நரகத்தின் வேதனைகள் எம்மை அமல்களால் பாதுகாக்கவேண்டும். இன்று ஜனாஸாக்களை பார்க்ககூடிய நாம் அடுத்த வினாடி ஜனாஸாகளாக மாறலாம் என்ன வைத்துள்ளோம். எமது மண்ணறைக்கு என எமது உள்ளத்தை கேட்போம் தெளிவான விடை கிடைக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

5 comments:

  1. masha allah. very good advice

    ReplyDelete
  2. MashaAllah.v.good articles I accept n must follow it every one specialy Muslim ummah.i must thanks for jaffna muslim this kind of adviced articles publicized.AllahuAkbar .jazakkallukaira.

    ReplyDelete
  3. MashaAllah.v.good article n advised. I accept n must following.I Must thanks for Jaffna Muslim this kind of quality articles publicized n every one follow n get good banifisary to Aakeera specely muslim brothers..jazakkallukaira.for author.AllahuAkbar.

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ் !
    அருமையான ஆக்கம்!

    மரணத்தை மனதில் பதிந்துவிட்டீர்கள்.

    ஜஷாக்கல்லாஹு க்ஹைரா!

    ReplyDelete

Powered by Blogger.