Header Ads



வீணாப்போன சமுக சேவகர்களே

(நிசாம் பாரூக் சவுதி அரேபியாவில் இருந்து  )

அஸ்ஸலாமு அழைக்கும்

சமுக சிந்தனை சமுக சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு கடந்த சில நாட்களாக ஒரு வீடியோ பற்றியும் அதனுடன் தொடர்பான ஓடியோ பற்றியும் எழுதுகின்ற பகிர்கின்ற வீணாப்போன  சமுக சேவகர்களே 

உங்களது இந்த செயலினால் ஏற்படுகின்ற அனைத்து பாவங்களுக்கும் அல்லாஹ்விடம் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள் 

ஒரு தவறு பற்றி எழுதும் போது அதனை வர்ணித்து விவரித்து பிறரையும் பார்ப்பதற்கோ அல்லது அந்த செயலை செய்வதற்கோ ஆசையூட்டும் விதமாக அமைய கூடாது அதிலும் சமுகவலைத்தளத்தில் எழுதுகின்ற போது மிக கவனமாக செயற்பட வேண்டும் என்கின்ற அடிப்படையை கூட பலர் கவனிப்பது இல்லை 

சமுக வலைத்தளங்களில் பகிர்கின்றபோது அதனை பலர் பல கோணங்களில் நோக்குகின்றனர் அதன் மூலம் ஒரு கணிசமானோர் எழுதியவரின் அல்லது பகிர்ந்தவரின் நோக்கத்துக்கு முற்றிலும் மாறாக அதனை புரிந்துகொண்ட செயட்பப்டுவதும் உண்டு. 

ஏதேனும் ஒரு பாவச்செயல் நிகழும் பொது அதன் மூலம் மேலும் பவம் தொடரும் அபாயம் இருக்கும் பொது அதனை மிக நிதானமாக கையாளவேண்டும்

 இந்த நிகழ்வின்போதும் இதுபற்றி ஒரு தீர்வு எடுக்க விரும்பியவர்கள் முதலில் அதனுடன் தொடர்புடையவர்களை நேரடியாக தொடர்புகொள்ள முயட்சித்திருக்கலாம் அல்லது அந்த பிரதேசத்துக்கு சென்று அதற்கான சட்டநடவடிக்கை எடுக்க முயட்சித்திருக்கலாம்.

அப்படியான முயற்ச்சியை செய்திருந்தாலும் அதனை பரப்பவேண்டிய அவசியம் இல்லை மாறாக இணையம் பற்றிய ஒரு விழிப்புணர்வை  பெண்கள் மத்தியில்  எடுத்து செல்வது அதனுடன் தொடர்பான வேலைத்திட்டங்களை பொதுவாகவும் ஆழமாகவும் செயற்படுத்த வேண்டி இருக்கின்றது 

அதைவிட்டு விட்டு நாமும் ஆராய்கின்றோம் ஆராய்ந்தோம் என்று பலருக்கு பகிர்ந்து பெரிய ஆய்வலர்களாக மாறிவிட்டார்கள் இப்படியான சேவர்கள் இதனை விடவும் சமுகம் எதிர்நோக்குகின்ற எத்தனையோ  பிரச்சனை பற்றி ஒரு நிமிடமேனும் ஆராயிந்திருக்க மாட்டார்கள் 

ஒரு தவறை பற்றி ஆராயும் பொது அதனை அனைவரும் பார்த்து அனைவரும் ஆராய வேண்டிய அவசியம் இல்லை இந்த நிகழ்வின்போது பின்வரும் மூன்றில் ஒன்றே நிகழ்திருக்கும் 

1)இருவரும் தெரிந்தே தவறு செய்திருக்கலாம்

2) ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருக்கலாம் 

3) இருவரையும் மூன்றாவது ஒரு நபர் ஏமாற்றி இருக்கலாம் 

எனவே உண்மையான சமுக சிந்தனை ஈமானிய உணர்வுடைய எவரும் இந்த மூன்று காரணங்களுக்குமான விழிப்புணர்வை ஏற்படுத்தினால் போதுமானது அகவே வேறு எந்த ஆய்வும் அவசியமற்றது அல்லது பவச்செயளாகவே அமையும்

1 comment:

  1. You are right man,, I agree with you 100 percent. Please stop sharing any thing about that girl in face book because of that people trying to search that video.
    So please stop talking about others. Allah bless every body... thanks

    ReplyDelete

Powered by Blogger.