Header Ads



ஜனாதிபதி முறை நீக்கப்படாது, மிதமிஞ்சிய அதிகாரங்களே குறைக்கபடும்


இலங்கையின் தற்போதைய அரசாங்கம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக நீக்காது எனவும் அதில் இருக்கும் மிதமிஞ்சிய அதிகாரங்களை மாத்திரம் நீக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பதவியான நாடாளுமன்றத்திற்கும் சட்டத்திற்கும் பணிந்த பதவியாக தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனாதிபதியிடம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் தொடர்ந்தும் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாபதிபதி பதவியை ஒழிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படியான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த அரசாங்கத்திற்கு எவ்விதமான எதிர்பார்ப்பும் கிடையாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. sareeyana mudeeu edu ameen kadayam janadi padi muramae erukanum

    ReplyDelete
  2. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    பதவி எனும் குதிரையில் ஏறும் வரையில் அதை சண்டிக்குதிரையென்று விமர்சிப்பதும் அதில் ஏறி கடிவாளத்தைப் பிடித்து ஓட்ட ஆரம்பித்ததும் சூப்பர் குதிரையென்பதும் நியாயமற்றது.

    இதற்கு முன்பும் சந்திரிகா அம்மையார் தான் ஜனாதிபதி பதவிக்கு வந்ததும் அதனை ஒழிப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு பதவியிலிருந்து தான் விலகும் வரை அதனை நிறைவேற்றாமலே சென்றார். அதன் விளைவைத்தான் கடந்த ஜனவரி 8ம் திகதி வரை மக்களாகிய நாம் அனுபவித்தோம்.

    நிறைவேற்று ஜனாதிபதி பதவி ஒரு கூர்மையான கத்தி போன்றது.
    சிறந்த ஒரு சத்திரசிகிச்சை நிபுணரிடம் இருந்தால் அளவற்ற பயனையும் பைத்தியக்கரனின் கையிலிருந்தால் ஆபத்தையும் விளைவிக்கத்தக்கது.

    எவ்வாறாயினும் தனிமனிதர் ஒருவரிடம் அளவுகடந்த அதிகாரம் குவிந்திருப்பது ஜனநாயகத்திற்கு எந்த வகையிலும் ஆபத்தானதே

    நிறைவேற்று ஜனாதிபதி பதவி சிறுபான்மை இன மக்களுக்கு சாதகமானது என்ற மூடநம்பிக்கையும் பலரிடம் உண்டு. அது தவறானது.

    மக்களின் ஆணையால் சுகபோக வாழ்வையும் சர்வாதிகாரத்தையும் இழந்தவர்கள் புதிய அரசை கவிழ்ப்பதற்கு உள்ளும் புறமும் சதி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதால், பொதுத்தேர்தல் மூலம் மீண்டும் நல்லாட்சியைத் தொடரக்கூடிய உறுதியான அரசாங்கம் உருவாகும் வரையிலாவது இன்றைய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் இருக்க வேண்டியது அவசியம் என்று கருதுவதை தவறு எனக்கூறுவதற்கில்லை

    ஆனால் இந்த நிறைவேற்று ஜனாதிபதி பதவி நிச்சயம் விரைவாக ஒழிக்கப்படவே வேண்டும். இந்த விடயத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டபடி நடந்து கொள்வதுதான் புதிய அரசின் மீது மதிப்பை ஏற்படுத்தும்.

    ReplyDelete

Powered by Blogger.