Header Ads



பாராளுமன்ற தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிவேன் - சரத் பொன்சேக்கா

முன்னாள் இராணுவத் தளபதியும், முப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவிடமிருந்து பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் பதவி, பதக்கங்கள், ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து சிறப்புரிமைகளும் அவருக்கு மீள வழங்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே  கருத்துத் தெரிவித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடப் போவதாகக் கூறினார்.

அடுத்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் 98,800 க்கும் அதிகமான மக்கள் வாக்களித்து தனக்கு அங்கீகாரம் வழங்கியிருந்ததாக இதன்போது பொன்சேகா நினைவுகூர்ந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் ஆட்சியிலிருந்த ஊழல்மிகு அரசாங்கம் தனது வாக்குகளை திருடியதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் தற்போது தனக்கு வழங்கி வருகின்ற ஆதரவை அவதானிக்கையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இரட்டிப்பான வாக்குகளை பெற்று வெற்றியீட்ட முடியும் என்ற நம்பிக்கை தனக்கிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.