Header Ads



மீள் குடியேறியுள்ள முஸ்லிம்கள், இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு


-இர்ஷாத் றஹ்மத்துல்லா -

மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேறியுள்ள முஸ்லிம்கள் இந்திய வீட்டுத்திட்டத்தில் புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாந்தை மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் எம்.நவ்பீல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்திய வீட்டுத் திட்டதேர்வில் வடக்கில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் தமது சொந்த கிராமங்களில் மீள்குடியேறிவருகின்றனர்.இந்திய அரசு இவ்வாறு மீள்குடியேறும் மக்களுக்கு  வழங்கும் வீடமைப்பு திட்டத்தில் பெரியமடு.விடத்தல் தீவு பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தெரிவுபட்டியலில் பெயர்கள் இருந்த போதும்.இம்மக்களுக்கு வீடுகள் வழங்கப்படாமல் வேறு பிரதேச மக்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் நவ்பீல் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அநியாயம் தொடர்பில் ஆட்சேபனை தெரிவித்துள்ளதுடன்.இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்தின் பொறுப்பதிகாரி உடன் தலையிட வேண்டும்  எனவும் அவ்வாறு நடவடிக்கையெடுக்கப்படாத பட்சத்தில் போராட்டங்களை நியாயத்துக்காக நடத்த நேரிடும் என்றும் கூறினார்.

இது தொடர்பில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  அவர்களை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்ட போது-

மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் மீள்குடியேறியுள்ள சன்னார்.பள்ளமடு முஸ்லிம்களுக்கு இந்திய வீடமைப்பு வழங்கப்படுவதற்கான உறுதிப்பாட்டை இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் வழங்கிய போதும்.தற்போது இவ்வீடுகள்  வழங்கப்படாமை தொடர்பில் மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயத்துக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும்.அந்த கடிதத்தில் இந்த நிலையினால் சில முரண்பாடுகள் ஏற்படும் நிலை குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார்.

No comments

Powered by Blogger.