Header Ads



நரேந்திர மோடி 'சட்டை' பிரச்சினையில் சிக்கினார்

அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தபோது, ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது பிரதமர் மோடி, ‘‘பந்த் கலா’’ எனும் கருப்பு நிறத்தினாலான கோட்–சூட் அணிந்திருந்தார்.

அந்த ‘கோட்’டில் தங்க நிறத்தில் கோடு, கோடு போல டிசைன் செய்யப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அந்த கோடு போன்ற வரிசையில் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி’’ எனும் மோடியின் முழுப் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது.

அன்று இது பற்றி யாருக்கும் தெரியவில்லை. ஆனால் மறுநாள் பத்திரிகைகளில் மோடியின் கோட் வாசகம் பெரிதுபடுத்தி காட்டப்பட்ட போதுதான் பிரதமர் மோடிக்காகவே பிரத்யேகமாக அந்த உடை தயாரிக்கப்பட்டது தெரிய வந்தது. அந்த உடை விலை ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மோடி பெயர் பொறித்த அந்த உடை எங்கு தயாரிக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்றாலும் இங்கிலாந்தில் உள்ள ஷெர்ரி, ஹாலந்து ஆகிய இரு நிறுவனங்கள்தான் அந்த கோட்– சூட் தயாரிப்புக்கான துணி இழைகளை கொடுத்து இருக்கலாம் என்று தெரிகிறது.

துணிக்கான விலை மட்டும் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பிரபல தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இந்த உடையை வடிவமைத்து தைத்து இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர் சிறப்பு உடை தைக்க ரூ.5 லட்சத்துக்கு மேல் வாங்குவார்.

இதன் அடிப்படையில் பார்த்தால் பிரதமர் மோடிக்காக தைக்கப்பட்ட கோட்–சூட் விலை குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வரை இருக்கலாம் என்று இங்கிலாந்தில் வெளியாகும் ‘‘லண்டன் ஸ்டாண் டர்டு’’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தையல் கலைஞர் டாம் ஜேம்ஸ் இதுபற்றி கூறுகையில், ‘‘இது போன்ற ஆடைகளை எங்களால் மட்டுமே வடிவமைக்க முடியும்’’ என்றார். ஆனால் துணி இழைகளை வழங்கிய லண்டன் நிறுவனங்கள் இந்த தகவலை உறுதிபடுத்த மறுத்து விட்டன.

இதற்கிடையே பிரதமர் மோடி, ஒபாமாவை சந்தித்த போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள பிரத்யேக உடையை அணிந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடியை எதிர்த்து பொதுமக்கள் காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடி தன்னை அலங்கரித்து கொள்வதை கைவிட வேண்டும் என்று பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் மோடி ஆதரவாளர்கள், ‘‘இது தனி நபர் சுதந்திரத்தில் தலையிடுவது போல உள்ளது’’ என்று பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மோடியின் பெயர் பொறித்த உடைக்கு எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதனால் கடந்த இரு தினங்களாக வலைத் தளங்களில் மோடி சட்டை பிரச்சினை உச்சத்தில் இருக்கிறது.

1 comment:

  1. இந்தியாவில் மிகவும் முட்டாள்கள் உள்ளனர் ஏன் என்றால் தேவையான விடயத்திற்க்கு ஆர்ப்பாட்டம் பன்னாமல் தேவையில்லாத ஒரு விடயத்தை தூக்கிப்பிடிக்கின்றனர். சினிமா படங்களில் கவர்ச்சி என்கிற பேரில் ஆபாசமாக நடிக்கின்றனர் இதனால் சமூக சீர்க்கேடு நடைப்பெறுவதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. இனி இவர்களை முட்டாள்கள் என்று சொல்லாமல் வேறு எவ்வாறு சொல்வது

    ReplyDelete

Powered by Blogger.