Header Ads



ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு சமூகத்தினரும், மைத்திரிபாலவுக்கு வாக்களித்த விதம் நன்கு புலப்பட்டுள்ளது

வரலாற்றில் எப்போதும் இடம்பெற்றிராத வகையில் மைத்திரி நிர்வாகத்தை தோற்றுவிப்பதற்காக புதிய கூட்டணியொன்று உருவாகியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஹெல உறுமயவின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் இந்த கருத்தை வெளியிட்டார்.

எனவே, மைத்திரி ஆட்சியின் கீழ் எதிர்தரப்பினர் மீதும் கருணையுடன் செயற்பட வேண்டும் என சோபித்த தேரர் தமது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, அஹிம்சையான முறையில் அதிகாரத்தை மாற்றக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த தேரர் குறிப்பிட்டார்.

இந்த சர்வாதிகார அதிகாரத்தை அகிம்சை வழியில் முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

இது தங்களது திறமையினாலோ அல்லது அதிகாரிகளின் திறமையினாலோ முன்னெடுக்கப்படவில்லை.

சிறந்த சமூகம் காரணமாகவே இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு சமூகத்தினரும், பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த விதம் நன்கு புலப்பட்டுள்ளதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுதவிர, பணத்திற்காகவும், போலியான பிரசாரங்களுக்காகவும், பொது மக்களின் விருப்பங்களை மாற்ற முடியாது என ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


No comments

Powered by Blogger.