Header Ads



சிறுபான்மை மக்களின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும்

(சத்தார் எம் ஜாவித்) 

தற்போது வெகுவாகப் பேசப்பட்டு வரும் விடயம்தான் ஜனாதிபதித் தேர்தலாகும். இந்தத் தேர்தல் கடந்த காலத் தேர்தல்களை விடவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவால் மிக்கதாகவும் காணப்படுகின்றது எனலாம்.

மேற்படித் தேர்தல் ஜனாதிபதியாக இருக்கட்டும், அல்லது எதிர்க்கட்சிகளாக இருக்கட்டும் அல்லது சிறுபான்மைக் கட்சிகளாக இருக்கட்டும் ஒவ்வொருவருக்கும் சவால் மிக்கதாகவே காணப்படுகின்றது.
ஏனென்றால்  இத்தேர்தல் மூலம் இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற விடயம் முக்கியத்துவம் உடையதாக பேசப்படுகின்றது.

தற்போது இலங்கையின் தலை விதியை நிர்ணயிக்கும் ஒரு விடயமாக ஜனாதிபதித் தேர்தல் பேசப்பட்டு வருகின்றன. அந்த விடயத்தை சற்று எடுத்து நோக்கும் போது இது அனைவர் மத்தியிலும் சாதக, பாதகத் தன்மைகளுடன் பேசப்பட்டு வருவதுடன் ஒரு சாரார் மாற்றம் ஒன்று தேவை என்ற கொள்கைகளிலும், மற்றொரு சாரார் நாட்டிற்கு மாற்றம் தேவiயில்லை தற்போதைய தலைவரே தேவை என்ற வாதங்களிலும் இறுக்கமாகக் காணப்படுகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் விடயத்தை மக்கள் மத்தியில் இருந்து அவதாணிக்கும் போது மாற்றம் தேவை என்ற கருத்துக்கள் பலமாகக் காணப்பட்டாலும் தற்போதைய ஜனாதிபதியை மீண்டும் முதன்மைப்படுத்த தேவையான அனைத்து விடயங்களும் அரசியல் உயர் மட்டத்திலிருந்து தாராளமாகவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

தற்போதைய நிலையில் இலங்கையின் ஆட்சி முறைமை சர்வாதிகார ஜனநாயக விரோத செயற்பாடுகளிலும், குடும்ப ஆட்சி முறைமைகளிலும் செல்வதாகவே பலதரப்பட்டவர்களாலும் கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவைப்பாடு உணரப்பட்டு அதனை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்த வன்னம் காணப்படுகின்றன.

இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க இன்று பல எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை முன் நிறுத்தி அதன் மூலம் வெற்றி கொண்டு நிறைவேற்று ஜனாதிபதி ஆட்சி முறைமைக்கு முடிவுகட்ட பாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை மேற்படி நிலைமைகளுக்கு மாற்றமான முறையில் ஜனாதிபதி முறைமையே தேவை என்ற கொள்கைப் பிரகடனத்துடன் ஆளுங்கட்சியினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தேர்தலில் களமிறக்க முன்வந்தள்ளனர். இதற்கான நீதி மன்ற ஆலோசனைகளைக் கூட ஆளுந்தரப்பினர் பெற்றுள்ளமையும் இங்கு முக்கிய விடயமாகும்.

இவ்வாறான போட்டித் தன்மைகளின் மத்தியில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க் கட்சிகளின் பட்டியல்களுக்கு அடுத்ததாக சிறுபான்மையினர் என்ற வகையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் காணப்படுகின்றனர். இன்றைய தேர்தல் கள நிலவரங்களின்படி பெரும்பான்மைக் கட்சிகளின் போட்டித் தன்மைகள் காரணமாக வாக்குகள் சில வேளைகளில் சம நிலையில் வருவதற்கான அல்லது குறைந்த வித்தியாசத்தில் அவை வாக்குகளைப் பெற்றுக் கொள்ளப்படலாம் அவ்வாறான நிலைமைகளில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் சில வேளைகளில் ஜனாதிபதியை நிர்ணயிக்கும் அல்லது ஆட்சியை தீர்மாணிக்கும் சக்திகளாக வந்து விடலாம் என்ற வியூகங்கள் காணப்படுவதையும் குறிப்பிடலாம்.

தற்போதைய நிலையில் ஜனவரியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில்  ஆளுங்கட்சி சார்பாக வாக்குகள் குறைவடைவதற்கான சமிக்கைகள் தற்போது காட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக தற்போதைய ஆளுங்கட்சி கூட்டமைப்பில் பங்காளியாக இருந்து வந்த ஜாதிகஹெல உறுமைய விலகியமை மற்றும் சமுக விரோத குழுக்கள் என வர்ணிக்கப்படும் பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதியை ஆதரிப்பதாக தெரிவித்துள்ள விடயங்களை அவதானிக்கும்போது வாக்குகள் வெகுவாகக் குறைவடையும் நிலைக்கு அல்லது வாக்காளர் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு வழி வகுத்துள்ளது எனலாம்.

இதேபோல் எதிர்க் கட்சிகள் பல தற்போது இலங்கை அரசியல் ஆட்சி முறையில் ஒரு மாற்றம் வேண்டும் என்ற கொள்கையில் ஒன்றினைந்து இருப்பதும் அதற்கான பிரச்சார விடயங்களை விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் தேர்தல் வெற்றி வியூகங்களில் பாரியதொரு மாற்றங்களை எதிர் பார்க்க வேண்டியேற்படலாம் என அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

மேற்படி நிலைமைகளில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் சில வேளைகளில் அடுத்த ஜனாதிபதியை நிர்ணயிக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுவதால் மேற்படி சிறுபான்மை மக்கள் நிதானமாகவும், சரியாகவும் சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என புத்தி ஜீவிகளும், கல்விமான்களும் தெரிவிக்கின்றனர்.

இதற்காக தமிழ் அரசியல் தலைவர்களும், முஸ்லிம் அரசியல் தலைமைகளும் மக்களை குழப்பத்தில் தள்ளி விடாது கடந்தகால துர்ப்பாக்கிய நிலைமைகள் எதிர் காலத்தில் ஏற்படாது ஜனநாயக உரிமைகளுடன் வாழும் நிலைமைகளுக்கு மக்களை வழி நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கருத்துக்களும் பரிமாறப்படுகின்றன.

சென்ற ஜனாதிபதித் தேர்தலை விடவும் இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கு சவாலானதாக இருப்பதுடன் வாக்காளர்களுக்கு திண்டாட்டத்தை ஏற்படுத்தும் தேர்தலாகவும் நோக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களில் அரசாங்கத்தை பலமாக ஆதரித்தவர்களாகவும், ஜனாதிபதிக்கு அதிக ஆதரவு வழங்கியவர்களாகவுமே காணப்படுகின்ற போதிலும் முஸ்லிம்கள் சமய ரீதியாக பல இன்னல்களை அனுபவித்தமையையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

எனினும் கடந்த காலங்களில் சமய ரீதியாக அனுபவித்த துன்பங்களுக்கு சரியான நீதியோ அல்லது நியாங்களோ அரசாங்கத்தால் கிடைக்கவில்லை என்ற விஷணத்தில் காணப்பட்டு வந்தாலும் பல முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்தை உரிய நேரத்தில் பாதுகாக்க குரல் கொடுக்கா விட்டாலும் ஜனாதிபதியை ஆதரிக்க வேண்டும் என்ற கொள்கையில் தம்மை மடயர்களாக ஆக்குவதில் வல்லவர்களாக காணப்படுவதாகவும் முஸ்லிம் புத்தி ஜீவிகளும், சமயப் போதகர்களும் தமது ஆதங்கங்களை வெளியிடுகின்றனர்.

நடை பெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமுகம் சற்று ஆழமாகச் சிந்திக்க வேண்டிய நிலைமைகள் காணப்படுகின்றன. காரணம் கனிசமான அளவு மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கத்தயாராக இருந்து வருகின்ற போதிலும் அந்த ஆதரவு குறைந்து செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. காரணம் பொதுபல சேனா ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதும் அதன் மூலம் ஜனாதிபதியை வெற்றியடையச் செய்வோம் அதன் மூலம் பௌத் அரசாங்கத்தை ஏற்படுத்துவோம் என்ற பொதுபல சேனாவின் அறை கூவல் மேற்படி நிலைமைகளுக்கு காரணமாகும்.

மேற்படி நிலைகைளின் மத்தியில் சில வேளை ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையேற்படலாம் என்ற வியூகத்தில் சிறுபான்மை மக்களின் அரசியல் தலைமைகள் சிறுபான்மை மக்களின் நலன்களை அடிப்படையாக வைத்து பேரம் பேசும் விடயத்தில் தமது காய் நகர்த்தல்களை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த கால துன்பியல் அனுபவங்களை ஒரு பாடமாகக் கொண்டு சிறுபான்மை மக்கள் இம்முறைத் தேர்தலில் வாக்களிப்பதில் பலமடங்கு சிந்தித்து தமது வாக்குகளை அளிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக சமுக ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுபான்மையினர் என்ற வகையில் இனவாதிகளால் கடந்த மூன்று வருடங்களாக சமய ரீதியான பல இன்னல்களை அனுபவித்த போதிலும் ஜனநாயக நாடு என்ற வகையிலும் கூட நீதி, நியாயங்களை நாடிய போதெல்லாம் அம்மக்களின் அனைத்து விடயங்களும் புறந்தள்ளப்பட்டு மாற்றான்தாய் மனப்பான்மையில் பார்க்கப்பட்ட விடயங்கள் எல்லாவற்றிற்கும் விடை கானும் அல்லது நியாயங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இம் முறை ஜனாதிபதித் தேர்தலில் காணக் கூடியதாகவுள்ளது.

கடந்தகால நிலைமைகளை கருத்திற் கொண்டு சிறுபான்மை மக்கள் என்ற வகையிலும் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையிலும் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர மக்களை தொடர்ந்தும் ஏமாற்றி வாக்குப் பெறும் தந்திரோபாய சக்திகளில் இருந்து விலகி மக்களை சரியான வழியில் சுயமாக வாக்களித்து அதன் மூலம் தமது இருப்புக்களை உறுதிப்படுத்திக் கொள்ளவதற்கான வியூகங்களை அரசியல் தலைமைகள் ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தொகுத்து நோக்கும்போது எதிர் வரும் தேர்தலில் சிறுபான்மை மக்கள் என்ற வகையிலும் பல பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்தவர்கள் என்ற வகையில் தமது உரிமைகளையும், சுதந்திரங்களையும் சரியான முறையில் அனுபவிப்பதற்கான அங்கீகாரத்தை தரும் வேட்பாளரைத் தெரிவு செய்து  வாக்களிப்பதற்கான வகையில் ஒன்றினைய வேண்டும் அதற்கான நல்லதொரு தருணமாக எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல் விளங்குகின்றதால் அதனை சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அநேகமானவர்களின் எதிர் பார்ப்புக்களாகும். 

1 comment:

  1. As the President during the 4 years period of his second term, President Mahinda Rajapaksa has failed to focus on the minority community issues, rather concentrate only on infrastructure development, while making sure that the issues of the majority community had his full attention.

    As a Sinhalese Buddhist leader in a country where 74% of the population are Sinhalese, what the President was doing was correct. But now, the President has to think about the minority communities too. Concerning the Sri Lankan Muslims who represent 7-8%, the President had been misguided to ignore the “Muslim Factor”. Muslim ministers and parliamentarians of the SLFP and member representatives of the coalition parties, specially from the North and East and the UNP Muslim parliamentarians are to be blamed for this dire political situation of the Sri Lankan Muslims. The other Muslim entities, civil societies and self proclaimed community leaders failed the opportunities that were plenty to engage President Mahinda Rajapaksa in resolving Muslim issues and the “MUSLIM FACTOR”. Now they tell the Muslim voters we have all failed.

    The President has to be SINCERE when dealing with the Muslims. THE MINORITY COMMUNITIES have 01 (one) million votes in their vote bank island wide. The president has to remember this during campaigning. Opportunistic Muslim politicians may “cut horse deals” showing our votes and deceive the president because the “Muslim polity” (Muslim votes) are NOT in the control of Muslim parties or Muslim politicians any more. The President has to reach out to the minority communities. The President has to especially reach out to the Muslim community, the Muslim voters, if he wishes to get their votes.
    Noor Nizam – Peace and Political Activist,”Api Marakkalayo Sangvidahana – Naam Muslimgal Iyakkam”

    ReplyDelete

Powered by Blogger.